உண்ணாமல் குடிக்காமல் வாயை கட்டி வயிற்றை கட்டி லலித் ஜயசிங்க கட்டும் ஹோட்டல்!

வித்தியா கொலை வழக்கில் சிக்குண்டுள்ள சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் புதிய ஹோட்டல் குறித்த தகவல்கள் விரைவில் வௌியிடவுள்ளதாக 'லங்கா நியூஸ் வெப்' கூறியது. அதன்படி கட்டுமானப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் லலித் ஜயசிங்க ஹோட்டலின் புகைப்படம் கீழே வௌியிடப்படுகிறது. இந்த ஹோட்டல் காலி ஹிக்கடுவ திரானகம பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

உண்ணாமல் குடிக்காமல் சேமித்த பணமா இது?

இவ்வாறான ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கு கோடி கணக்கில் பணம் தேவை என்பது அனைவருத் அறிந்ததே. சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மேலதிக கொடுப்பனவு இன்றி கிடைக்கும் சம்பளம் 60000 ரூபாவாகும். லலித் ஜயசிங்கவின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இவ்வாறு செலவு செய்து ஹோட்டல் அமைக்க லலித் ஜயசிங்க நிச்சயம் உண்ணாமல் குடிக்காமல் பணம் சேமித்திருக்க வேண்டும்.

காணி வழங்கியது மனோஜ் மென்டிஸ்

முன்னாள் ரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் மென்டிஸ் குறித்த ஹோட்டலை கட்டுவதற்கான காணியை வழங்கியுள்ளார். அவர் ஒரு பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர். 2015 மார்ச் 23ம் திகதி பாதாள குழு துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்படும்போது அவர் மீது 13 கொலை குற்றச்சாட்டுக்கள் இருந்தன. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கப்பம், லஞ்சம், மோசடி, ஊழல் என சண்டித்தனம் காட்டிய மனோஜ் மென்டிஸ் லலித் ஜயசிங்கவிற்கு நன்கொடையாக காணி வழங்கினார் என்றார் அதனை நம்ப முடியுமா? எனினும் பாதாள குழு உறுப்பினர்களுக்கு லலித் ஜயசிங்க உதவினார் என்பது தௌிவாகிறது.

சுற்றுலா வியாபாரத்தை லலித் கவனித்த விதம்

சுற்றுலா துறைக்காக லலித் ஜயசிங்க ஆற்றிய சேவையை குறைத்து மதிப்பிட முடியாது. பிரித்தானிய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது காதலியை கூட்டு வன்புணர்வு செய்தவர்களை பாதுகாத்த பெருமை லலித் ஜயசிங்கவை சாரும். 2011 டிசம்பர் 24ம் திகதி கொலை செய்யப்பட்ட குராம் செயிக் வௌிநாட்டவர் குறித்து விசாரணை நடந்தபோது குற்றவாளிகளை காப்பாற்ற லலித் ஜயசிங்க முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கல்ல கொலை குற்றவாளிக்கு அளித்த பாதுகாப்பு

கொலையாளி சம்பத் விதானபத்திரனவை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்கால்ல வந்தபோது லலித் ஜயசிங்கவே சம்பத்தை தன்னிடம் அழைத்துக் கொண்டார். தனது பொலிஸ் ஜீப்பில் முன் ஆசனத்தில் இருக்கவைத்து அவ்வாறு அழைத்துச் சென்றுள்ளார். 'இவர் எமது பிரதேச சபைத் தலைவர் சிலர் செய்த தவறுகளுக்கு இவர் மாட்டிக் கொண்டார். இவர் அப்படிபட்டவர் அல்ல' என்று சம்பத்துக்கு நற்சான்று வழங்கியவர் லலித் ஜயசிங்கவே. எனினும் சம்பத்தை கைது செய்து விளக்கமறியலில் வைத்தபோது அங்கு வந்த லலித், 'உங்கள் அனைவருக்கும் பைத்தியமா இவர் எமது பிரதேச சபை தலைவர். நற்பெயர் கொண்ட இவரை விளக்கமறியலில் வைப்பதா? என்று கூறி அவரை வௌியில் எடுத்துள்ளார். எனினும் சட்டம் தனது கடமையை செய்ததால் சம்பத் இன்று சிறையில் உள்ளார். இலங்கை சுற்றுலா துறைக்கு கறுப்பு புள்ளியிட்ட குற்றவாளிகளை காப்பாற்ற நினைத்த லலித் ஜயசிங்க 20 அறைகள் கொண்ட ஹோட்டலுக்கு உரிமையாளர் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வித்தியா கொலை குற்றவாளிகளை காப்பவும் அனுசரணை!

எனவே குற்றவாளிகளை காப்பாற்றும் செயலில் லலித் ஜயசிங்க புதியவர் அல்ல. வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க உதவிய விடயத்தில் லலித் ஜயசிங்க தற்போது விளக்கமறியலில் உள்ளார். பொலிஸ் ஆணைக்குழு இவரை பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கு முன்னர் நூரி தோட்ட அதிகாரி கொலை குற்றவாளி அத்தகொட்டா, தங்காலை கொலை குற்றவாளி சம்பத் ஆகியோருக்கு அடைக்களம் கொடுத்த லலித் ஜயசிங்க மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வித்தியா கொலை குற்றவாளிகள் தப்பிக்க லலித் உதவி செய்திருக்க மாட்டார். 'குரு நின்ற நிலையில் சிறுநீர் கழிக்கும்போது சீடர்கள் ஓடி ஓடி சிறுநீர் கழிப்பர்' என்று ஒரு கருத்து உள்ளது. அதுபோல சிறு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கினால் உயர் அதிகாரிகள் திருந்துவர். உயர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கினால் சிறு அதிகாரிகள் திருந்துவர். எனவே லலித் ஜயசிங்கவிற்கு நல்ல தண்டனை வழங்கி பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்னுதாரணம் காட்ட வேண்டியது அவசியம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top