விஜயகலாவிற்கு சாகல அடைக்கலமா ?

ஜயகலாவிற்கு சாகல அடைக்கலமா ? சிவலோகநாதன் வித்தியாவின் தாக்குதல் குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபரான மகாலிங்கம் சசிகுமார் என்ற சுவிஸ்குமார் என்பவருக்கு பாதுகாப்பு வழங்கியமை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறுர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய வேண்டாம் என சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சுவிஸ்குமார் என்பவர் புங்குடுதீவு பிரதேசத்தில் மக்களால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த போது அவரை அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு உதவியமை தொடர்பில் அமைச்சர் விஜயகலா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் அது குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவினால் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகளின் பிரகாரம் அவரிடம் விசாரனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த ஜூலை 31ம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவித்திருந்தும் தனக்கு அவ்வறிவித்தல் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்து விசாரனை நடவடிக்கையிலிருந்து தப்பிக்க பார்;க்கின்றார். கடந்த வாரம் விசாரனைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவில்லை.

எவ்வாறாயினும் சிறுவர் விவகார அமைச்சர் இது குறித்து தனது நெருங்கியரிடம் 'நான் இது குறித்து பிரதமருக்கும், சாகலவிற்கும் கூறியிருக்கின்றேன். சாகல கூறினார் பயப்பட வேண்டாம் என்று' கூறியுள்ளார். அத்துடன் பாடசாலை மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோத்திற்குற்படுத்தியவர்களை காப்பாற்ற முன்வந்திருப்பவர் நாட்டின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர். இதுவா நல்லாட்சி?

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top