பிணைமுறி மோசடி விவகாரம் - பிரதமர் ரணிலிடம் விரைவில் விசாரணை!

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அடுத்த வாரம் ஜனாதிபதி விசாரணைக்குழு அரசாங்கத்தின் முக்கிய மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி முதலில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம இரண்டாவதாக கபீர் ஹசிம் மூன்றாவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர். 

மேலும் பிணைமுறி மோசடியில் சிக்கியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இவ்வாரம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. 

2015 பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் 2015 மார்ச் 31ம் திகதிவரை இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில்  விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். குறித்த விசாரணை குழு தற்போது பல தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top