செத்துப்போன நடராஜாவின் சொத்துக்களை பகல் கொள்ளையிட்ட எஸ்.பி பதவி விலகுவது எப்போது?

அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என முதலில் கோசம் எழுப்பியது அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்க ஆவார். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ரவி கருணாநாயக்கவை பதவி விலகக் கூறிய எஸ்.பி திஸாநாயக்க, பல திருகுதாலங்கள் செய்து விசாரணைகள் பலவற்றை முடக்கியமை தொடர்பில் 'லங்கா நியூஸ் வெப்' இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. 

கொழும்பு 7இல் 'ஹேவா எவனியு' வீதியில் கே.சி.நடராஜா என்ற கோடீஸ்வரர் வசித்து வந்தார். அவர் முன்னாள் சட்ட வல்லுநர் கே.சி.நடேசனின் உறவினர். திருமணம் முடிக்காத நடராஜா அதிக குடிபழக்கம் காரணமாக உயிரிழந்தார். நடராஜா இறக்கும் முன்னர் தனது இறுதி கடிதத்தில் கொழும்பு 7இல் உள்ள தனது வீடு உள்ளிட்ட அதனை அண்டிய அனைத்து காணி நிலங்களையும் கொழும்பு வைத்திய கல்லூரிக்கு உயில் எழுதி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் 2008-2009 காலத்தில் இடம்பெற்றது. 

அப்போது உயர்கல்வி அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்க குறித்த சொத்துக்களை தனதாக்கிக் கொள்ள கடுமையாக முயற்சித்தார். அதனால் குறித்த வீட்டில் இரு நபர்களை அவர் தங்க வைத்திருந்தார். எனினும் நடராஜாவின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், இறுதி உயில் பிரகாரம் சொத்துக்கள் கொழும்பு வைத்திய கல்லூரிக்கு சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் வீட்டில் தங்கியிருந்த இருவரை அகற்றி வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது. 

அப்போது கப்பில பிரேமதாஸ என்பவரே கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தார். அவர் இன்று உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரியுடன் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் மனைவி தமரா திஸாநாயக்க நடராஜாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். விஸ்கி போத்தல்களை ஒன்றுசேர்ப்பது நடராஜாவின் பொழுதுபோக்கு. அவர் கோடி ரூபா பெறுமதிக்கு விஸ்கி அருந்தி அதனை சேமித்து வைத்துள்ளார். குறித்த விஸ்கி போத்தல்கள், வீட்டில் உள்ள தொல்பொருட்கள் மற்றும் பிராடோ வாகனம் ஒன்று என்பவற்றை எஸ்.பி, தமரா மற்றும் கப்பில ஆகியோர் எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு பொலிஸார் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை தங்களது பதிவு புத்தகத்தில் பதிவு செய்து கொண்டனர். 

இது குறித்து நடராஜாவின் உறவினர்கள் குற்றப் புலனாய்வு பிரிவில்  முறைப்பாடு செய்தபோதும் இதுவரை விசாரணை நடைபெறவில்லை. அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தனது அரசியல் அதிகாரத்தை கொண்டு விசாரணையை நிறுத்தி வைத்துள்ளார். இவ்வாறு பகல் கொள்ளையில் ஈடுபட்ட எஸ்.பி.திஸாநாயக்க இன்றும் வௌியில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அது மாத்திரமன்றி மற்றைய நபர்களின் குற்றம் மற்றும் விசாரணைகள் குறித்து வெட்கமின்றி கதைக்கிறார். தேர்தலில் தோல்வியுற்ற தேசிய பட்டியல் மூலம் அமைச்சராகிவர் இவர். 

இது பகல் கொள்ளை குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என நாம் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கேட்கிறோம். அன்று பட்டப்பகலில் திருடிய பொருட்கள் எங்கே என எஸ்.பி அமைச்சரிடம் கேட்கிறோம். அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே! பகல் கொள்ளையில் ஈடுபட்ட எஸ்.பி. திஸாநாயக்கவை எப்போது பதவி விலகச் சொல்லப் போகிறீர்கள்.?

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top