ரவியின் வெற்றிடத்திற்கு சாகல சாகலவின் வெற்றிடத்திற்கு திலக்!

வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியதிலிருந்து அந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

எனினும் குறித்த பதவிக்கு திலக் மாரப்பன, சரத் அமுனுகம, நவீன் திசநாயக்க என பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

தற்போது குறித்த அமைச்சு பதவிக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி மீண்டும் திலக் மாரப்பனவிடம் கையளிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது திலக் மாரப்பனவே சட்டம், ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்தார். எனினும் அவன்ட் கார்ட் தொடர்பான சர்ச்சையை அடுத்து அவர் பதவி விலகியிருந்தார்.

மேலும், புதிய வெளிவிவகார அமைச்சருக்கான பரிந்துரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம மூலமாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top