ஓய்வுபெற்ற DIGயின் குற்றத்தை மகளிர் மற்றும் சிறுவர் நடவடிக்கைள் பிரிவு மறைக்கின்தா?

சிறுவர் துஷ்பிரயோகம் குற்றம் சுத்தப்பட்டுள்ள ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் குறித்து லங்கா நிவுஸ் வெப் இணையம் இதற்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது. கீர்த்தி சில்வா என்ற அந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் குறித்து விசாரனை இடம்பெறாமைக்கு மகளிர் மற்றும் சிறுவர் நடவடிக்கைள்  பிரிவு செயல்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

 
தான் சிறுவயதாக இருந்த காலம் முதல் குறிப்பிட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தன்னை பலவந்தமாக துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியதாகவும், அதனை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததன் பின்னர் தனக்கு வீடு ஒன்றை பெற்றுக் கொடுத்து அதனை மறைத்ததாகவுமு; மகளிர் மற்றும் சிறுவர் நடவடிக்கைகள் பிரிவிற்கு யுவதி ஒருவர் புகார் வழங்கியுள்ளார். எவ்வாறாயினும் இது குறித்து விசாரனை இடம்பெறவில்லை என உயர் அதிகாரி ஒருவர் மற்றும் அரசியல்வாதிகள் பலர் மகளிர் மற்றும் சிறுவர் நடவடிக்கைகள் பிரிவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் செய்தி குறிப்பிடுகின்றன. 


அத்துடன் இந்த குற்றவாளி ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கடந்த (11)ம் திகதி இடம்பெற்ற சர்வதேச பொலிஸ் தினத்தில் வெட்கம் இல்லாமல் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் 'நீங்கள் சர்வதேச பொலிஸ் தினத்தை கொண்டாடுவதற்கு இவ்வாறான மகளிர் மற்றும் சிறுவர் துஷபிரயோக குற்றவாளியையா இணைத்துக் கொள்வீர்கள்?' என நாம் கேட்க கேட்கின்றோம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top