இரும்புத் திருடன் கோட்டாபய 'எனக்குத் தெரியாது!'

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்களை இரும்பு கடைக்கு விற்ற குற்றச்சாட்டிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் அதற்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் சிரி ஹெட்டிகே பொறுப்பு சொல்ல வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாரிய குற்றத் தடுப்பு ஆணைக்குழுவிடம் சாட்சி அளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இரும்பு விற்று பிழைத்தோர் நாட்டுப்பற்றாளர்கள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் காணப்பட்ட பெருமதிமிக்க இயந்திரங்களை ராஜபக்ஷக்கள் இரும்பு கடைக்கு விற்பனை செய்த விடயத்தை 'லங்கா நியூஸ் வெப்' இணையம் 'இராணுவத்தினர் நாட்டுப்பற்றாளர்கள் காங்கேசன்துறை தொழிற்சாலை இரும்புகளை விற்று தின்றனர்' என்று விரிவாக செய்தி வௌியிட்டிருந்தோம். ஆனால் இன்று சிரி ஹெட்டிகே மீது கோட்டாபய குற்றம் சுமத்தினாலும் உண்மை நிலையை நாம் மீண்டும் விளக்குகிறோம். 

அமைச்சரவை அனுமதி அவசியம்

2014ம் ஆண்டு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை இரும்புக்கு விற்க விலைமனு கோரப்பட்டபோதும், பாதுகாப்பு அமைச்சின் கணக்காளர் இந்த தொழிற்சாலை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இல்லை என்பதால் விற்பனை நடவடிக்கையை தம்மால் மேற்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். அப்படியே விற்பனை செய்ய வேண்டுமாயின் அமைச்சரவை அங்கீகாரம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். அந்த தகவலை எடுத்துக் கொண்டு சிரி ஹெட்டிகே, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை சந்திக்கச் சென்றுள்ளார். 

இது குறித்து தான் பாதுகாப்பு கவுன்ஸிலில் பேசியுள்ளதாகவும் அதனால் விற்பனை முயற்சினை முன்னெடுக்குமாறும் பிரச்சினை இல்லை என்றும் கோட்டாபய கூறியுள்ளார். எனினும் இது குறித்து எழுத்துமூலம் அறிவிக்குமாறு சிரி ஹெட்டிகே இரண்டு தடவை கோட்டாவிடம் கேட்டுள்ளார். ஆனால் கோட்டாபய எழுத்துமூலம் கடிதம் அனுப்பாத காரணத்தால் சிரி ஹெட்டிகே இவற்றை ஆவணங்களில் பதிவு செய்துள்ளார். 

கோட்டாபயவின் 'சிறுபிள்ளை கதை' 

அன்று கோட்டாபய அமைச்சரவைக்கும் மேலாக அதிகாரம் கொண்டவராக காணப்பட்டார் என்பதை நாடே அறியும். அதனால் இந்த இரும்பு விற்பனை குறித்து தெரியாது என கோட்டாபய சொல்வது கேலிக்கூத்தாகும். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் கோட்டாபய 'சிறுபிள்ளை பதில்' சொல்கிறார். நிர்வாக சேவை குறித்த எவ்வித அறிவும் அற்றவரே கோட்டாபய. அதனால் 'எனக்கு தெரியாது' என்று கூறி தப்பிக்க முயன்றாலும் சிரி ஹெட்டிகேவின் ஆவண குறிப்பு காரணமாக கோட்டாவிற்கு தப்பிக்க முடியாது. 

இதில் இரண்டு பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று கோட்டாபயக்களை பெரிய வீரன் நாட்டுப்பற்றாளன் என்று எண்ணும் பிரிவினருக்கு, இந்த பொய் நாட்டுப்பற்றாளர் நாட்டின் சொத்துக்களை வளங்களை களவாடி விற்றுள்ளான். அதுபோல 'அவர்கள் நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள், அவர்கள் நாட்டு சொத்துக்களை விற்றவர்கள் ஆனால் நாம் அப்படி அல்ல. இவ்வாறு கூறியவர்கள் இன்று ' எனக்குத் தெரியாது, அதோ அவர்தான்' என்று பொய் கூறி நழுவிச் செல்லப் பார்க்கின்றனர். 

இரண்டாவது எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வர முயற்சிக்கும் நபர்களுக்கு, குடும்ப நன்மைக்காக நிர்வாக கோட்பாடுகள் அனைத்தையும் பின்தள்ளி குடும்ப உறுப்பினர்களை முக்கிய பதவிக்கு அமரச் செய்யும் போது எதிர்காலத்தில் அவர்கள் கோட்டாபய போன்று நிலத்தில் அடித்துக் கொள்வர் என்பதை நினைவில் வைக்கவும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top