க்ஷிராந்திக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அதிகம் கலந்துகொண்ட புலனாய்வு பிரிவு!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையான ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதில் 500 பேர்வரை கலந்துகொண்டனர். அதில் அதிகமானோர் புலனாய்வு பிரிவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளார். க்ஷிராந்தியை 2020 அடுத்த ஜனாதிபதியாக்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னதாக திரண்ட மக்கள் பல கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “எமக்கு மஹிந்த அரசு வேண்டும், எமது தாய் மீண்டும் திரும்பி வரவேண்டும், என தெரிவித்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஸ சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இவருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் வருகை தந்துள்ளார்.

இதனால் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மஹிந்தவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஸ சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top