''உனக்கு தொப்பை அதிகம், நாங்கள் ஆட்சியை பிடிப்போம்" நாமலின் அச்சுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக, அந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர்.

''உனக்கு தொப்பை அதிகம், நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அதற்கு பின்னர் உனது வயிற்றை குறைப்போம்” என நாமல் ராஜபக்ச அச்சுறுத்தியுள்ளார்.
அச்சுறுத்தலுக்கு உள்ளான பொலிஸ் பரிசோதகர் சாந்த லலித், அது உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள கிறிஸ் என்ற இந்திய நிர்மாணத் திட்டம் ஒன்றுக்கு 4.3 ஏக்கர் காணியை குத்தகைக்கு வழங்கிய போது நடந்துள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இந்த அதிகாரியே விசாரணைகளை நடத்தி வருகிறார்.

இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச, “ இவனை புகைப்படம் எடு” என்று கூறி தன்னை அவமானப்படுத்தியதாக சாந்த லலித் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

கிறிஸ் வழக்கில் தான் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தி சாந்த லலித்திடம் 400 மில்லியன் ரூபாவை இழப்பீடாக கோரி, நாமல் ராஜபக்ச வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top