பொலிஸ்மா அதிபருக்கு இறுதி அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்  !

இலங்கை பொலிஸ் பிரிவில் சேவையாற்றும் சிறு ஊழியர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் சேணாதிபண்டார ஜயசுந்தரவிற்கு தனது பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டு இராஜினாமா செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த (19) அன்று தெரிவித்துள்ளார். 


இது குறித்து பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையில் அலரி மாளிகையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அதன் போது இலங்கை பொலிஸ் சேவை தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் இலங்கையினுள் தற்பொழுதும் சித்திரவதை இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு மேற்கொள்ளப்படும் நிறுவனங்கள் இடையே இலங்கை பொலிஸ் பிரிவு முதலாவது வரிசையில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் இலங்கை பொலிஸ் பிரிவில் பொலிஸ்மா அதிபரின் இவ்வாறான நடவடிக்கை பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது என்பதனால் எடுக்க வேண்டிய ஒரே தீர்மானம் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டு இராஜினாமா செய்ய வேண்டும்.


இவ்விசேட கலந்துரையாடலின் போது பிரமரின் கருத்துக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் அமைதியாக இருந்ததுடன் செப்டெம்பர் மாதம் இறுதிவரை பொலிஸ்மா அதிபர் பதவி வகிக்க சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவரது ஒரே கோரிக்கையாக இருந்தது. இதற்கு பிரதமரின் அனுமதியும் கிடைத்துள்ளது.


இவ்வாற அமைச்சரவை தீர்மானம் அறிவிக்கும் போது பொலிஸ்மா அதிபருக்கு வெள்ளையடிக்க எதிர்ப்பார்த்திருக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபரின் நிலைமையை விட கீழ் இறக்க நினைப்பது குறித்து லங்கா நிவுஸ் வெப் இணையத்திற்கு கருத்து தெரிவித்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ' வாள் ஒன்றில் ஒருவரை வெட்டி கொலை செய்த கொலை பற்றி விசாரனை செய்யாது வாளைப் பற்றி விசாரனை செய்யும் வேலையைப் போல்' 'பொலிஸ்மா அதிபரின் நடவடிக்கையைப் பற்றி விசாரனை செய்யாது எவ்வாறு காணொலி வெளியானது என்பதைப் பற்றி விசாரனை செய்ய வேண்டும்' என தெரிவித்தார்.


பொலிஸ்மா அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் சமரகோன் பண்டாரகேவின் காணொளி லங்கா நிவுஸ் வெப் இணையத்தில் வெளியிடப்பட்டது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் குற்றச்சாட்டுக்கு மின் உயர்த்தி இயக்குநரின் பதில் அளிக்கு கலந்துரையாடல் வெகு விரைவில் எதிர்ப்பாருங்கள்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top