இராசாயன விஞ்ஞான வினாப்பத்திர வௌியீடு ஒருவர் கைது

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இராசாயன விஞ்ஞான வினாப்பத்திரத்தின் சில கேள்விகள் முன்கூட்டியே வௌியானதாக கூறப்படும் சம்பவத்தில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த வினாப்பத்திரத்தை இலத்திரனியல் கருவிகள் மூலம் அந்த வினாத்தாள் பகிரப்பட்டுள்ள குற்றச்சாட்டிலேயே குறித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் மாணவன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top