CID விசாரணையில் பொலிஸ்மா அதிபரின் சதி !

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் செயல்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக தனக்கு வேண்டிய ஒருவரை நியமிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் முயற்சிப்பதே இதற்கான காரணம்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த டீ.ஆர்.ஆர். நாகஹாமல்லவிற்கு பிரதி பொலிஸ்மா அதிபரா பதவி உயர்வு கிடைத்ததுடன் அவர் பிரிதொரு பிரிவிற்கு மாற்றப்பட்டதுடன் அவரின் பதவி வெற்றிடமாக இருந்தது. CID பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரே நியமிக்கப்டுபவார். அதற்கமைய புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவை நியமிக்க வேண்டும் என்பது CIDயின் கோரிக்கையாக இருந்தது. இருப்பினும் பொலிஸ்மா அதிபர் பூஜித அக்கோரிக்கையை பொருட்படுத்தாது பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் (SIU) பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மெவன் சில்வாவை நியமிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்வதற்கு செயல்பட்டு வருகின்றார்.

பொலிஸ் விசேட விசாரணை பிரிவு என்பது முற்றிலும் பொலிஸ்மா அதிபரின் உத்தரவில் செயல்படும் நிறுவனமாகும். அதன் தலைவரை கூட பொறுட்படுத்தாது பொலிஸ்மா அதிபரின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது. பொலிஸ்மா அதிபர் பூஜித நினைத்திருப்பது CID யினரே மின்தூக்கி இயக்குநர் மீதான தாக்குதல் சம்பவத்தின் போது CCTV காணொளி ஊடகங்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என. தற்பொழுது பொலிஸ்மா அதிபரின் தாக்குதல் அடங்கிய CCTV காணொளி ஊடகங்களுக்கு எவ்வாறு பெற்றுக் கொடுக்கப்பட்டது என்று விசாரணை முன்னெடுத்து வரப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top