பொலிஸ்தின நிகழ்விற்கு 80 இலட்ச ரூபாவா ?

151வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கு நிகழ்விற்காக செலவு ரூபா 80 இலட்சம் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் பொலிஸ் தின நிகழ்வு இடம்பெறும் தினம் இம்முறை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


1866ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி இலங்கை பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமையவே செப்டெம்பர் 3ம் திகதி பொலிஸ் தினம் கொண்டாடப்படுகின்றது. இருப்பினும் இம்முறை பொலிஸ்மா அதிபர் பூஜிதவிற்கு வேறு வேலை இருப்பதால் செப்டெம்பர் 7ம் திகதி அதாவது இன்று நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இந்நிகழ்விற்காக அறவிடப்பட்ட நிதி ரூபா 80 இலட்சம். மலசலகூட வசதிகள் அற்ற பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறு 80 இலட்ச ரூபா செலவில் பொலிஸ் தினத்தை கொண்டாடுவது வேடிக்கையாக இருக்கின்றது. கடந்த வாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க அவசர விஜயம் மேற்கொண்டிருந்த போது இதனை கண்காணித்துள்ளதுடன் பொலிஸ்மா அதிபர் உட்பட குறிப்பிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவித்துளார்.


சாதாரண பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய காலணி மேஸ் கூட கிடைக்கவில்லை. இருப்பினும் 80 இலட்ச ரூபா செலவில் பொலிஸ் தினத்தை கொண்டாட தயார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top