சீல் துணி வழக்கு – லலித் வீரதுங்க மற்றும் மனுஷ பெல்பிடவிற்கு சிறை தண்டனை !


கடந்த ஆட்சி காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் பணத்தை பயன்படுத்தி சீல் துணிகளை விநியோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவரும் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


முன்னாள் ஜனாதிபதியின் வெற்றிக்காக ஜனாதிபதி தேர்தலின் போது பொது சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் அதன் ஊடாக அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.


மேற்குறிப்பிட்ட மூன்று குற்றங்கள் குறித்து ஒரு குற்றத்திற்காக ஒன்றரை வருடம் விகிதம் நான்கரை வருடம் சிறை தண்டனை மற்றும் ஒரு குற்றவாளிக்கு ரூபா 30 இலட்சம் விகிதம் ஒரு தண்டப்பணமும் மேல்நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றம் குறித்து ரூபா 50 இலட்சம் விகிதம் ரூபா 100 இலட்சம் நஷ்டஈட வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top