பொலிஸ்மா அதிபரின் எதிர்ப்பை பொருட்படுத்தாது பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஷானி நியமனம் !

நேற்று (7) பொலிஸ் ஆணைக்குழு கூடிய சந்தர்ப்பத்தில் குற்ற விசாரனை திணைக்களத்தின் பணிப்பாளரராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவை நியமிப்பதற்கு பத்தில் ஒன்பதாக அனுமதி கிடைத்துள்ளது. அதற்கு பொலிஸ்மா அதிபர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 


இதற்கு எதிராக இந்த பதவியை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான மெவன் சில்வாவை நியமிக்குமாறு தனக்கு ஆலோசனை வழங்கியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.


இருப்பினும் குற்ற விசாரனை திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு மெவன் சில்வாவை நியமிக்குமாறு தனக்கு ஆலோசனை வழங்கியது பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் செய்தி குறிப்பிடுகின்றது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top