ஒக்டோபரில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்சபை நீதிமன்றம் செல்லுமா?


நிஷாந்த விக்கிரமசிங்க, சுசந்த ரத்நாயக்க, ஷமேந்திர ராஜபக்ஷ, மனிலால் பெர்ணான்டோ, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன, ஜயமான்ன, சனத் உக்வத்த, கபில சந்திரசேன போன்றவர்கள் அடங்கிய ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர்சபை, விமானசேவை முகாமைத்துவம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு ரூபா 200 மில்லியன் நஷ்டம் ஏற்படுத்தியமைக்காக நீதிமன்றத்தில் முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நம்கத்தகுந்த வட்டாரங்கள் ஊடாக செய்தி குறிப்பிடுகின்றன.


2012ம் ஆண்டு வருடாந்த அறிக்கையின் பிரகாரம் சுசந்த ரத்நாயக்க பணிப்பாளர் சபையின் தணிக்கை குழுவின் தலைவர் என்பதோடு ஜோன் கீல்ஸ் ஹோல்டின்ஸின் தலைவரும் இவரே ஆவார். இருப்பினும் தணிக்கை குழுவில் பிரதானியாக பட்டய கணக்காய்வாளர் ஒருவரையே நியமிக்க முடியும். ரத்நாயக்க கணக்காய்வாளர் என குறிப்பிடப்படவில்லை. 


இப்பணிப்பாளர் குழுவிற்கு எதிராக பாரியளவு மோசடிகள் உள்ளதுடன் அவை முன்னாள் சிவில் ஊழியர் லலித் வீரதுங்கவிற்கு மூன்று வருட தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்ட TRC சம்வத்தை விட பாரதூரமானது.

அஜித் டயஸ் மற்றும் சுரேன் ரத்வத்தேவினால் ரூபா 2.3 பில்லியன் பணம் சட்டவிரோதமாக செயல்பாடுகள் மற்று மோசடிகளை மூடிமறைப்பதற்கு உபயோகித்தாலும் அவை வெற்றியடையவில்லை. விசாரனை அpகாரிகளுக்கு ஏற்றவாறு பணிப்பாளர் சபை எவ்வித டென்டரும் வழங்கவில்லை. விசாரனைகள் தற்பொழுது நிறைவடையும் பட்சத்தில் உள்ளது. முன்னாள் பணிப்பாளர்சபை அங்கத்தவர்கள் மூன்று வருடங்களாக பாதுகாக்கின்ற ஒரு சில அதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


ஸ்ரீலங்கன் ஊழியர்களுக்கமைய ஊழியர்களை இணைத்துக்கொண்டமை காரணமாக 120 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு விமானவைக்கு ஏற்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top