1150 x 80 px

 

வரவு - செலவுத் திட்ட உரையின் இரகசியத்தன்மை குறித்து அன்றுபோல் இன்றும் பிரச்சினை!
 
வரவு - செலவுத் திட்ட உரைகளை அச்சிடும் பணியை அரச அச்சகத்திற்கு ஒப்படைக்காமல் கடந்த அரசாங்கம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்தது போல தற்போதைய அரசாங்கமும் செயற்படுவது ஏன் என்று அரசாங்கத்திற்குள்ளேயே கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரிடம் நாம் கருத்து கேட்க முயன்றது பயனளிக்கவில்லை. எனினும் இந்த தகவல் உண்மை என்பமை நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். 
 
 
 
ஆனால் அது குறித்து மேலதிக தகவல் வழங்க முடியாது என அவர் கூறினார். வரவு செலவு திட்ட உரைகள் இதற்கு முன்னர் அரச அச்சகத்தில் இரகசியமாகவே அச்சிடப்பட்டன. அதன் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டது. அந்த பகுதியில் பரீட்சை வினாத்தாள், தேர்தல் ஆவணங்கள் அச்சிடப்படுவதால் அது மிகவும் பாதுகாப்பான பிரிவாகும். 
 
எனினும் கடந்த அரசாங்கம் இதனை இல்லாதொழித்து மெட்ரொபொலிடின் என்ற தனியார் நிறுவனத்திற்கு அச்சுப் பொறுப்பை வழங்கியது.  உரைக்கு முன்னதான நாளில் சிறிய இயந்திரம் கொண்டு குறித்த நிறுவனம் அச்சிடும் பணிகளை மேற்கொள்ளும். கடந்த அரசாங்கத்திலும், ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது இவ்வாறே அச்சிடப்பட்டுள்ளது. இதன் இரகசியத்தன்மை மற்றும் செலவு குறித்து பிரச்சினை உள்ளது. அரச நிறுவனத்தில் அச்சிடுவதை
விட பல மடங்கு செலவு தனியார் நிறுவனத்தில் அச்சிடும் போது ஏற்படுகிறது. 
 
இது தொடர்பான சகல தகவல்களும் வௌியான நிலையில் குறித்த ஆவணத்தின் இரகசியத் தன்மை குறித்து அவதானம் செலுத்துமாறும் அதிக செலவில் தனியார் நிறுவனத்தில் அச்சிடுவதை விட அரச அச்சகத்தில் குறைந்த செலவில் அச்சிடுவது குறித்து கவனம் செலுத்துமாறும் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதி நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுப்பார் என்றும் ஜனாதிபதி அலுவலக முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Top