1150 x 80 px

 

பணிப் புறக்கணிப்பால் சில மருத்துவர் மதிப்பை இழந்துவிட்டனர்! ராஜித்த

நோயாளர்களைக் கண்டுகொள்ளாமல், தமது உரிமைகளை முன்னிலைப்படுத்தி

பணிப் புறக்கணிப்பு செய்ததால் சில மருத்துவர்கள் தமது மதிப்பை இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பணிப் புறக்கணிப்பின் மூலம் நோயாளர்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளதாகவும் இதனால் மருத்துவருக்கான மதிப்பை பொதுவெளியில் இழந்துள்ளதுடன், வெறுபுணர்வை அவர்கள் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறையில் அல்லது மருத்துவக் கல்வி குறித்து சிக்கல்கள் இருக்குமாயின் அவற்றை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அளுத்கமயில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் ராஜித்த,அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஏராளமான மருத்துவர்கள் இருக்கின்றனர். சில மருத்துவர்களின் செயல்பாடுகளினால் மருத்துவத்துறைக்கும், அனைத்து மருத்துவருக்கும் கலங்கம் ஏற்படுகிறது. கல்வித்துறையை அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்று நடத்தும் காலம் தற்போது அரிதாகி வருகிறது. இதனால் தனியார் கல்வியில் கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது'' என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சைட்டம் கல்விக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Top