புலிகளின் ஆயுதங்கள் தேடி அதிரடிப்படை முல்லைத்தீவில் தேடுதல்!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையிலேயே இந்தப் பணிகளை அதிரடிப்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.

அகழ்வுப் பணிகளின் போது இதுவரை கிடைத்த பொருட்கள் குறித்து எவ்விதத் தகவல்களையும் அதிரடிப்படையினர் வெளியிடவில்லை.

Top