புதிய அரசமைப்பில் நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்கப்படாது!

புதிய அரசியல் அமைப்பில் நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்கப்படாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற முறைமைக்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு குறித்து இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் விளக்கமளித்தார்.

தேசப்பற்றாளர் என்ற பெயர் பலகைகளை மாட்டிக் கொள்ளாத போதிலும் நாடு தொடர்பில் உணர்வுடன் செயற்படுகிறோம்.

புதிய அரசியல் அமைப்பில் நாட்டுக்குப் பாதகம் ஏற்படக்கூடிய எந்தவொரு விடயமும் கிடையாது என்பதை மிகுந்த பொறுப்புடன் கூறுகின்றேன்.

உத்தேச அரசியல் அமைப்பு குறித்து இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் அமைப்பு குறித்து தங்களது கருத்துக்களை வெளியிட முடியும்.

இதேவேளை, அரசியல் அமைப்புப் பேரவை இந்த மாதம் 30,31, நவம்பர் 1ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

Top