1150 x 80 px

 

நீதிபதி இளஞ்செழியனை சுட முயற்சித்தவருக்கு மீண்டும் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது

துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் கைதான சந்தேக நபருக்கான விளக்கமறியலில் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் குறித்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

கடந்த ஆடி மாதம் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் அவரின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஒரு மெய் காவலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது.

Top