அம்பாந்தோட்டையில் பதற்றம்: 3 பொலிசார் காயம், 25 பேர் கைது

அம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது.

ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்கார் மீது பொலிசார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிசார் முற்பட்டனர்.

இதன்போது 3 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை பொலிசார் கைதுசெய்தனர்.

ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல், சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விதிமுறைகளை மீறியதால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க நேரிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Top