இலவசமாக அமெரிக்கா செல்ல இலங்கையர் தற்போது விண்ணப்பிக்கலாம்!

2019ஆம் ஆண்டுக்கான கீரின் கார்ட் எனப்படும் அமெரிக்க குடிவரவு வீசா லொத்தர் சீட்டு வேலைத் திட்டத்திற்கான பதிவுகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

கிறீன்கார்ட் லொட்டரி என அழைக்கப்படும், 2019ஆம் ஆண்டுக்கான இந்தத் திட்டம் 2017 ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல், 2017 நவம்பர் 7 ஆம் திகதி வரை இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்காகத் திறந்திருக்கும்.

பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சி திட்டம் எழுந்தமான விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட, விண்ணப்பதாரிகள் அமெரிக்க விசாவுக்கு தேர்முகதேர்வுக்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

அவர்கள், அதில் தகுதிபெற்றால் சட்டபூர்வமான நிரந்தரமான அமெரிக்க குடியிருப்பாளர்களாக மாறுவார்கள்.

கருத்தில் கொள்ளவேண்டிய சில பரிந்துரைகள்:

- ​​லொத்தருக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் 2017 ஒக்டோபர் 3 முதல் 2017 நவம்பர் 7 வரை திறந்திருக்கும்.

- தகுதிபெற்ற நாடுகளின் பிரஜைகள் இந்த லொத்தருக்கு விண்ணப்பிக்கலாம். இலங்கையும், மாலைதீவும் தகுதிபெற்றுள்ளன.

- விண்ணப்பதாரிகள் ஒருமுறை மாத்திரமே விண்ணப்பிக்கலாம். பலமுறை விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

- பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சி திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையை விண்ணப்பதாரிகள் பெற்றிருக்க வேண்டும்.

- விண்ணப்பங்கள் உறுதிசெய்யப்பட்ட இலக்கத்தை விண்ணப்பதாரிகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்களா என ஆராய்வதற்கு அது தேவைப்படும்.

இணைய விண்ணப்பம் என்பது முற்றுமுழுதாக இலவசமானது. மறைமுக கட்டணங்கள் எதுவுமில்லை, மோசடிகள், அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கும் நபர்கள், நிறுவனங்கள் மற்றும் நீங்கள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக தெரிவிப்பவர்கள் குறித்து அவதானமாயிருக்கவும், விண்ணப்பத்தை பூர்த்திசெய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் மூன்றாம் தர்ப்பொன்றின் உதவி அவசியமில்லை.

இந்தத் திட்டம் குறித்து மேலதிகமாக அறிந்துகொள்வதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் https://lk.usembassy.gov/visas/immigrant-visas/diversity-visa/ என்ற இணையத்தளத்துக்கு செல்லவும்:

இதேவேளை, ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் முழுமையான அறிவுறுத்தல்கள் காணப்படுகின்றன. லொத்தருக்கு விண்ணப்பிப்பதற்காக www.dvlottery.state.gov. செல்லவும்.

மே மாதம் 2018 ஆரம்பத்தில் உள்ள நுழைபவர் நிலை பக்கத்துக்குச் சென்று www.dvlottery.state.gov நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்களா என்பதை உறுதிசெய்யமுடியும்.

தெரிவுசெய்யப்பட்டவர்கள் மேலதிக தகவல்களை சமர்ப்பிக்குமாறு கோரப்படுவார்கள், மேலும், அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நுழைபவர் நிலை பக்கத்துக்குச் செல்லும்போது அவர்கள் நேர்முகத்தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்த அறிவித்தலைக் காணலாம்.

நேர்முகத் தேர்வுக்காக, தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க தூதரகத்தின் அதிகாரியொருவரின் நேர்முகத்தேர்வை தெரிவு செய்யப்பட்டவர் எதிர்கொள்ள வேண்டும், அவரே நீங்கள் விசா பெறுவதற்கு தகுதியானவரா என்பதை தீர்மானிப்பார். மருத்துவ மற்றும் பொலிஸாரின் அறிக்கைகளும், அமெரிக்க தூதரகத்தின் விசா கட்டணத்துக்கான கட்டணமும் தேவைப்படும் என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top