திருப்தி தரிசனம் பெற்ற மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (08) அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக நேற்று (07) பெங்களூர் வழியாக திருப்பதி சென்றார்.

திருமலையில் உள்ள நாராயணகிரி மலையில் உள்ள ஸ்ரீவாரி பாதத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது மனைவி ஜெயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார்.

திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (08.10.2017) அதிகாலை 2.30. மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு கோயிலுக்குச் சென்றார்.

இங்கு விசேட அதிதிகளுக்கு செய்யப்படும் மரியாதையுடன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி, ஏழுமலையான் கோயிலில் அதிகாலையில் நடைபெறும் முதல் சேவையான சுப்ரபாத சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.

பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கிய ஜனாதிபதி, கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, 2018 ஆண்டுக்கான நாள்குறிப்பேடு, நாள்காட்டி ஆகியவற்றையும் வழங்கினர். அத்துடன், வேத பண்டிதர்கள் ஆசீர்வதித்தனர்.

இதன்போது கோயில் முன்பு இருந்த செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது அதனை ஜனாதிபதி தவிர்த்திருந்தார்.

பின்னர் காலை காலை 8.30 மணிக்கு காரில் பெங்களூர் சென்ற ஜனாதிபதி நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.

திருப்பதியிலிருந்து செய்தியாளர் ஜெயக்குமார்

President maithripala in Tirupati1

AmbewelaBlackBridge2

AmbewelaBlackBridge2

AmbewelaBlackBridge4

Top