உள்ளூராட்சி தேர்தல்களில் முஸிலிம் காங்கிரஸ் தனித்து போட்டி!

உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏனைய பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி – உடுநுவர பிரேச செயலகத்திற்கு உட்பட்ட கொன்டியாதெனிய அல்டன்வத்தை சமூக நீர் வழங்கல் திட்டம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நேற்று (07) மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது.

இதில் பற்ற பின்னர் செய்தியாளர் எழுப்பிய கேள்வி பதிலளித்த போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த தேர்தலில் 15.6 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளுக்காக 335 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

Top