அ'புரம் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமானதால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா போராட்டத்தில் உள்ள அரசியல்கைதிகள் மூவரினதும் உடல்நிலை மோசமடைந்ததனையடுத்து அவசர அவசரமாக நேற்றிரவு (-8) அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையினில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகள் மூவரும் அருந்தி வந்த குடிநீரையும், முறுத்து போராட்டத்தை தொடர்ந்திருந்த நிலையில் நேற்று மதியம் அவர்கள் உடல்சோர்வுற்று மயக்கமடைந்திருந்தனர்.

நிலைமை அறிந்து அச்சமடைந்த சிறைச்சாலை நிர்வாகம் அவர்கள் மூவரையும் அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலை சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவர்களை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

முன்னதாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் சிறைச்சாலை வைத்தியர் கைவிரித்ததையடுத்தே அவசர அவசரமாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Top