சென்னைப் புத்தகக் காட்சியில் ஈழத் தமிழப் படைப்பாளிகள்

சென்னைப் புத்தகக் காட்சியில் ஈழத் தமிழப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் இடம் பெறும். இலங்கைக் கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் ஏற்பாடு செய்கிறார்.

காந்தளகம் பதிப்பாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தனின் அழைப்பை ஏற்று அவர் சென்னைக்குச் சென்றார். பதிப்பாளர் சங்கத்தாரைச் சந்தித்துப் பேசினார்.

சூன் 6 தொடக்கம் சூன் 13 வரை, சென்னை தீவுத் திடலில் 39ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (தெபுவிபச) ஆண்டுதோறும் இக்காட்சியை நடத்தி வருகிறது.

தெபுவிபசவின் இப்பொழுதைய தலைவர் கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன். இன்று 22.5.16 ஞாயிறு மாலை 3 மணிக்குக்குக் காந்தி கண்ணதாசன் தலைமையில் எசியன் சுரேசர், அம்மன் சத்தியநாதன், காந்தளகம் சசிரேகா மற்றும் கட்டைபறிச்சான் இரத்தினசிங்கம், கஸ்தூரி அரங்கன் ஆகியோர் இலங்கைக் கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசத்தை, சென்னை அம்பிகா எம்பையயர் சொகுசு விடுதியில் சந்தித்தனர்.

நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

1. சென்னைப் புத்தகக் காட்சியில் ஈழத்துப் படைப்பாளிகள் ஆக்கங்களைக் காட்சிக்கு வைத்தல்,
2. ஈழத்தில் தமிழகப் பதிப்பாளரின் புத்தகக் காட்சி நடத்துதல்,
3. யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்குத் தமிழகப் பதிப்பாளர் 10,000 தலைப்புகளை அன்பளிப்புச் செய்தல்
ஆகியன இக்கலந்துரையாடலில் இடம்பெற்றன. அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவு தருவதாகவும் கொழும்பு திரும்பியதும் ஈழத்துப் படைப்பாளிகளை அழைத்துப் பேசுவதாகவும் இலங்கைக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைப் படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களைச் சென்னைப் புத்தகக் காட்சிக்கு அனுப்ப விரும்பின் இலங்கைக் இராஜாங்கக் கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரணை 0094 11 2784870 தெபுவிபச தலைவர் காந்தி கண்ணதாசன் 0091 44 - 24338712 / 24332682, சென்னை காந்தளகம் திருமதி சசிரேகா பாலசுப்பிரமணியன் 0091 44 28414505 ஆகியோரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொள்க.
நிகழ்ச்சியின் புகைப் படம் இணைப்பில்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top