பிரபாகரன் பற்றிய புதிய திரைப்படம் !

இலங்கையின் உள்நாட்டு போர் மற்றும் பிரபாகரன் பற்றிய மேலுமொரு திரைப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்திரைப்படத்தின் டிரெய்லரும் சுவரொட்டிகளும் வெளியாகியுள்ளன.

ஒக்காடு மிகிலாடு என்ற இத் தெலுங்கு திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாக மஞ்சு மனோஜ் என்ற தமிழ் நடிகரே நடித்துள்ளார்.

இந்திய ஊடக அறிக்கைகளின்படி மஞ்சு மனோஜ் என்பவர், நடிகர் என்ற ரீதியில் பாரிய வெற்றிபெற்றவர் இல்லை என்பதுடன் அவர் இதுவரை நடித்து வெளியான திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை.

எவ்வாறாயினும் இத்திரைப்படம் ஈழத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் மஞ்சு மனோஜ் வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெலுங்கு சினிமா தகவல்கள் கூறுகின்றன.

டிரெய்லரில் திரைப்படம் தொடர்பில் 'இதுவரை கூறப்படாத உண்மையான கதை' என குறிப்பிடுகின்றது. இத்திரைப்படம் அஜெய் அண்ரூப் நூத்தாக்கியினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் டிரெய்லர் (Teaser Trailer)
https://www.youtube.com/watch?v=aFxdtxjBPtI

மஞ்சு மனோஜ் பற்றிய திரைப்படம்
https://www.youtube.com/watch?v=71vxDeNylxk

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top