மத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா நுவரெலியாவில் கோலாகலமாக ஆரம்பம்

மத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“அறிவு பெருக்கி ஆற்றல் மிகுவோம்” என்ற தொனிப்பொருளில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நுவரெலியா மாநகரில் 07.10.2017 அன்று காலை ஆரம்பிக்கப்பட்டது

இவ்விழா நுவரெலியா பழைய கடை வீதி முற்றத்திலிருந்து ஊர்வலமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதில் மத்திய மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், அரச முக்கியஸ்தர்கள் கல்வி அதிகாரிகள், எனப் பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த சாகித்ய விழா மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார, தமிழ் கல்வி அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பெரியசாமி சந்திரசேகரன், சு.திருச்செந்தூரன் மற்றும் திருமதி.சந்திரகுமாரி கணபதி, முருகேசு சுவாமிகள் ஆகியோரின் பெயரில் அரங்குகளும் மற்றும் துறைசார்ந்தோர் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

(க.கிஷாந்தன், டி.சந்ரூ, தலவாக்கலை- பி.கேதீஸ்)

- நன்றி மலையக குருவி

Sahithiya Vizla1

Sahithiya Vizla1a

Sahithiya Vizla4

Sahithiya Vizla6

Sahithiya Vizla12

Sahithiya Vizla10

Sahithiya Vizla3

Sahithiya Vizla14

 

Sahithiya Vizla2a

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]lankanewsweb.net

Top