நீதிமன்றுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பொலிஸார்!

அண்மையில் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் நீதிபதி ஒருவருக்கு விருந்து வைக்கச் சென்று பின் அந்த நிகழ்வு நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

ரவி பீரிஸ், ஜனக்க குணதிலக, ஜகத் பலிகக்கார, சூலா டி சில்வா, ஆர்.நாகமுல்ல, ஈ.மகேந்திர, சி.கலப்பதி, டி.பிரியலால் ஆகியவர்கள் அண்டையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றனர். மேல் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் பிரகாரம் இவர்கள் பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாரணை இறுதியில் இத்தீர்வு வழங்கப்பட்டுள்ளது. 

சட்டத்தில் தமக்கு நியாயம் கிடைத்துவிட்டதால் அதனை எப்படி அணுகுவது என்று தெரியாத இந்த பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நீதிபதிக்கு விருந்து ஏற்பாடு செய்து அவருக்கு அழைப்பும் விடுத்துள்ளனர். கிரிஸ்கெட் அதிசொகுசு மாடி வீட்டு தொகுதியில் ஒரு இரகசிய அறையில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அதற்கு நீதிபதிகள் எவரும் வருகை தரவில்லை. 

'இவர்கள் ஆடுவது மட்டுமல்லாமல் எம்மையும் ஆடச் சொல்கிறார்கள்' என்று குறித்த நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கில் வென்றதும் நீதிபதிகளுக்கு விருந்து வைப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். சட்டத்தை மதிக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறு செய்வது தவறான முன்னுதாரணமாகும். 151 வருட பொலிஸ் சேவை இன்று இந்த நிலைக்கு மாறியுள்ளது. 

வீதியில் செல்லும் சைக்கள் ஓட்டுனர்களிடம் தொடக்கம் லஞ்சம் பெறுவோர் நீதிமன்றுக்கும் லஞ்சம் கொடுக்க நினைப்பதால் 'இது என்ன வாழ்க்கை' என்று சிந்திக்கத் தோனுகிறது. 

இந்த விருந்து இடத்திற்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தன சென்றதாகவும் குறித்த பொலிஸ் உயர் அதிகாரிகள் அந்த அமைச்சரினால் ஆட்டுவைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் ஆணைக்குழு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top