பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலாக பொலிஸ் மா அதிபர்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர நியமிக்கப்பட்ட பின்னர் அந்த பதவியில் இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.நாகஸ்முல்லவை வேறு பிரிவிற்கு இடமாற்றம் செய்யாமல் அவரை குற்றப் புலனாய்வு பிரிவிற்குள்ளேயே வைத்திருக்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நடவடிக்கை எடுத்துள்ளார். 

பயிற்சி பாடத்திட்டம் முடிந்ததும் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் பெறவேண்டி நிலையில் நாகஸ்முல்ல அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை.  ரவி பீரிஸ், ஜனக்க குணதிலக, ஜகத் பலிகக்கார, சூலா டி சில்வா, ஆர்.நாகமுல்ல, ஈ.மகேந்திர, சி.கலப்பதி, டி.பிரியலால் ஆகியவர்கள் அண்டையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றனர். இதனை லங்கா நியூஸ் வெப் வௌியிட்டிருந்தது. 

பொலிஸ் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்தாமல் பொலிஸ் மா அதிபர் தனக்குத் தேவையானவற்றை செய்கிறார். CID பிரிவின் புதிய பணிப்பாளரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவே நாகஸ்முல்லவை பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் அங்கு வைத்துள்ளார். சானி அபேவர்த்தன இந்த பதவிக்கு நியமிக்கப்படுவை தடுக்கவே பொலிஸ் மா அதிபர் செயற்பட்டு வந்தார். 

FCID பிரிவின் அதிகாரத்தை குறைக்கவும் பொலிஸ் மா அதிபர் செயற்பட்டுள்ளார். அங்குள்ள பணிப்பாளரை பிரதி பொலிஸ் மா அதிபராக்கி இடமாற்றம் செய்துள்ளார்.  பொலிஸ் மா அதிபரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் ஆணைக்குழு புதிய பாடத்திட்டம் ஒன்றை அவருக்கு கற்பிக்க வேண்டும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top