மென்டிஸ் நிறுவனம் கோடிக் கணக்கில் வரி மோசடி!

மென்டிஸ் நிறுவனத்தில் பாரிய வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு கலால் திணைக்கள பதில் கலால் ஆணையாளர் தொடர்பு எனவும் தகவல் கிடைத்துள்ளது. 

மென்டிஸ் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 125,000 லீட்டர் அதாவது 50 பெரல்கள் தயாரிக்கின்ற போதிலும் 17,500 லீட்டர் அதாவது 7 பெரல்களுக்கு மாத்திரம் வரி கட்டுகின்றனர்.

மிகுதி 107,500 லீட்டர் அதாவது 43 பெரல்களுக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். முழு உற்பத்தியில் 86%ற்கு இவர்கள் வரி மோசடி செய்துள்ளனர். அதன்படி வருடம் ஒன்றுக்கு அவர்கள் பில்லியன் கணக்கில் வரி மோசடி செய்கின்றனர்.  

பதில் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.போதரகமவின் உதவியுடன் என்றும் அவருக்கும் மாதாந்தம் ஒரு தொகை செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிணை முறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜுன அலோசிஸ் மென்டிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top