20வது திருத்தச் சட்டமும் சர்வஜன வாக்கெடுப்பும்

20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மக்கள் கருத்துக்கணிப்பொன்று நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்று தெரியாது.

இது தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை போதும் என  நிறைவேற்றப்பட்டால் இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மக்கள் கருத்துக்கணிப்பொன்று அவசியம் எனக் குறிப்பிட்டால், நிச்சயமாக தேர்தலொன்றை நடத்த வேண்டும். ஒக்டோபர் 2 ஆம் திகதி வேட்புமனுகோரி, தேர்தலை கட்டயமாக நடத்தவேண்டிய தினமொன்று உள்ளது.

நீதிமன்றின் தீர்வொன்று வராமல் மாகாண சபைகளை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது. 20 ஆவது திருத்தச் சட்டம் வராவிட்டால், எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி தேர்தலை நடத்தவேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் கூறியுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top