'பசில் ராஜபக்ஷவால் நாம் சிறை சென்றோம்' - அநுஷ பல்பிட்ட

'பிக்குகளுக்கான சில் உடை விநியோகிக்க எமக்கு பணித்தவர் பசில் ராஜபக்ஷவே. இவ்வாறு செய்வது தவறு என்று நான் கூறியபோது வாழ்க்கையில் கேட்காத கெட்ட வார்த்தைகளை கேட்டேன். இது குறித்து நான் அப்போதைய TRC தலைவர் லலித் வீரதுங்கவிற்கு அறிவித்தேன். அதன்பின் வீரதுங்க, மஹிந்த ராஜபக்ஷவிடம் இதுகுறித்து கேட்டார். பசில் கூறுவாராக இருந்தால் அதனை விநியோகிக்கவும் என மஹிந்தவும் யோசிக்காமல் தெரிவித்துவிட்டார். அதனால் முடிந்தளவு நன்மைகளை எடுத்துக் கொண்டே நாம் சில் ஆடை விநியோகித்தோம். ஒவ்வொரு ஆவணத்திலும் பசில் ராஜபக்ஷவின் பணிப்பில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவித்தபின் என்றே நாம் குறிப்பு இட்டுள்ளோம். இறுதியில் நாம் இருவரும் சிறைக்கு வந்துள்ளோம்' என்று அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார். 

வெலிக்கடை சிறையில் உள்ள அநுஷ பல்பிட்டவை அவரது நண்பர்கள் சிலர் சந்திக்கச் சென்ற போது அவர் இவ்வாறு புலம்பியுள்ளார். 

'நாம் இருவரும் எமது வாக்குமூலத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளோம். மேலிடத்தில் இருந்து வந்த கட்டளையை நிறைவேற்றியதே நாம் செய்த செயல். ஆனால் நீதிமன்றம் எங்கள் இருவரையும் பழிவாங்கி பசில், மஹிந்தவை விடுவித்தது. இது நியாயமா? தர்மமா? இப்போது மஹிந்த எம்மை பார்க்க வந்து பொய் கூறிச் செல்கிறார். இன்றும் 6 மாதங்களில் ஆட்சி அமைத்து இருவரையும் பெரிய நட்டஈட்டுடன் வௌியில் கொண்டு வருவோம் என்கிறார். ஆனால் அதற்கு முன்னர் பசில், மஹிந்த இருவரும் வெலிக்கடை செல்வது உறுதி. நாம் பசில் வரும்வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்று அவருக்கு தெரியாத கெட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் கற்பிக்க தயார் நிலையில் உள்ளோம்' என்று அநுஷ பல்பிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top