1150 x 80 px

 

அரச அதிகாரி சூலானந்த பெரேராவின் தகடுதத்தங்கள்! இன்னும் வரும்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா பதவி நீக்கப்பட்டு உடனடியாக இடம்பெற்றம் செய்யப்பட்டார். இவர் குறித்து சட்டமா அதிபர் திணைக்களமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் செய்த விசாரணை இரகசியங்கள் வெளிவந்துள்ளன. இதனால் சூலானந்தவை பதவி நீக்கம் செய்தமைக்கான பாராட்டு நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கே சேர வேண்டும்.இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா பதவி நீக்கப்பட்டு உடனடியாக இடம்பெற்றம் செய்யப்பட்டார். இவர் குறித்து சட்டமா அதிபர் திணைக்களமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் செய்த விசாரணை இரகசியங்கள் வெளிவந்துள்ளன. இதனால் சூலானந்தவை பதவி நீக்கம் செய்தமைக்கான பாராட்டு நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கே சேர வேண்டும்.

சூலானந்த பெரேரா குடிவரவு, குடியகல்வு அதிகாரியாக பணியாற்றியபோது, இலங்கையில் ஆள்கடத்தல் செய்த நபரொருவருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்ததாக இரகசிய பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

30 வருடகால யுத்தம் முடிந்த நிலையில், 400 இற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு 'Sun Sea' கப்பல் கனடா கடற்பரப்பைச் சென்ற சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கும். 'கட்ட ரவி'' என்பவரே இதன் சூத்தரதாரி. யுத்தத்தில் அனைத்தையும் இழந்திருந்த தமிழ் அகதிகளிடம் இந்தக் கப்பலில் பயணிக்க பெருமளவு பணம் வசூலிக்கப்பட்டிருந்தது. ஒருவரிடம் தலா 25 லட்ச ரூபாவைப் பெற்று சண் சீ கப்பலை குத்தகைக்கு எடுத்து, அகதிகளுடன் கனடா கடற்பரப்பிற்கு கொண்டுசென்று, தத்தளிக்கவிட்டச் சம்பவத்தின் சூத்திரதாரி ''கட்ட ரவி'' ஆவர். இந்தக் கப்பலில் சென்றவர்களிடம் சுமார் ஒரு பில்லியன் ரூபா வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்ட ரவி அப்போது தாய்லாந்து பேங்க்கொக் நகரில் தங்கியிருந்துள்ளார். ஆட்கடத்தல்காரர்களின் மையப்புள்ளியாக அப்போது பேங்க்கொக் நகர் விளங்கியது. இதனால் சண் சீ கப்பலில் அகதிகளை ஏற்றுவதற்காக கட்ட ரவியும், கூட்டாளிகளும் பேங்க்கொக் நகரை அப்போது தேர்ந்தெடுத்து, அங்கே தங்கியிருந்தனர்.

அந்த சமயத்தில் இலங்கையின் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டு உயர் அதிகாரியாக இருந்த சூலானந்த பெரெரா தாய்லாந்து சென்றிருந்த போது, அவருக்குத் தேவையான போக்குவரத்து, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கட்ட ரவியும் கூட்டாளிகளும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.

Sun Sea கப்பலில் பயணித்த இலங்கை அகதிகளுக்கு இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டிருந்ததா என்று தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.

சூலானந்த பெரேரா மீது இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதுடன், ஊழல் மோசடி மிகுந்த அதிகாரியாகவும் இவர் பார்க்கப்படுகிறார். 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல பாதாள குழு குண்டரான கடுவெல தம்மிக்க அமரசிங்க, வேறொருவரின் கடவுச்சீட்டிற்கு தனது புகைப்படத்தைப் பதிந்து வெளிநாடு தப்பிச் சென்ற சம்வமும் பதிவாகியுள்ளது. (ஆட்கடத்தல்காரர்கள் இதனை ''ஹெல்மட்'' முறையெனக் கூறுவர்). இந்த காலத்தில் சூலாந்த பெரேரா மட்டுமே குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு மேலதிகாரியாக பதவி வகித்தார். இந்தச் சம்பவம் குறித்து அப்போது சாட்சியமளித்திருந்த சூலாந்த பெரேரா, அதுவொரு சட்டரீதியான கடவுச்சீட்டு எனக் கூறியிருந்தார். இவ்வாறு பொய் சாட்சி வழங்க, அந்நாள் கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவராக பதவி வகித்த திலங்க சுமதிபாலவிடம் எவ்வளவு பணம் பெற்றுக்கொண்டார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. அத்துடன், குறித்த வழக்கில் இருந்து தப்புவதற்கு அரச சட்டத்தரணியிடமிருந்தும் போதுமான ஒத்துழைப்புக்கள் சூலாந்த பெரேராவிற்கு கிடைத்திருந்தது.

2004 ஆம் ஆண்டு குடிவரவு, குடியகல்வ பிரதி ஆணையாளராக செயல்பட்ட சூலானந்த பெரேரா இன்னுமொரு பாரிய மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும், வானொலி உபகரணங்களையும் விநியோகித்த குற்றச்சாட்டில், ஆசீர்வாதன் சத்தியபன், தவராஜ் சசிகரன், சுஜித் குணபால ஆகியோர் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களிடமிருந்து கடவுச்சீட்டுக்களை தாய்லாந்து பொலிசார் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் நாடு கடத்தப்பட்டபோது, விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் இவர்கள் போலிக் கடவுச் சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை சூலானந்த பெரேராவே தயாரித்துக் கொடுத்துள்ளதாக இரகசிய பொலிசாருக்கு தகவல்கள் கிட்டியுள்ளன. இந்த மூவரையும் நாடு கடத்திய பின்னர், இவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது, சூலானந்த பெரோ குறித்து மிக முக்கிய இரகசிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவ்வாறு ஊழல், மோசடியான அரச அதிகாரியொருவர் இன்னமும் சட்டத்தில் சிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்டமூலத்தின் 45C சரத்தின் கீழ் இவருக்கெதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர, சூலானந்த பெரேராவை பதவி நீக்கி, இடமாற்றம் செய்துள்ளதால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்தச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

சூலானந்த பெரேரா குறித்து இன்னும் ஏராளமான இரகசிய தகவல்கள் எம்மிடம் இருக்கின்றன. இந்தத் தகவல்கள் சட்டமா அதிபர் திணைக்களம், இரகசிய பொலிசார் மேற்கொள்ளும் விசாரணைகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால் இருந்தாலும் அவற்றை தற்போதைக்கு வெளியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளோம். 

எனினும், இவ்வாறான மோசடி அரச அதிகாரிக்கு இன்னமும் சட்டத்தின் பாதுகாப்பை வழங்குவதா என்ற கேள்வியை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் முன்வைக்கிறோம்.

சூலானந்த பெரேராவின் மைத்துனரான கெரோக்கே வசந்தவிற்குச் சொந்தமான கேளிக்கை விடுதிகளில் பணியாற்றும் வெளிநாட்டு பாலியல் தொழிலாளிகள் வீசா நீடிக்கப்பட்ட விதம், BMW நிறுவனத்தின் 20 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகத்தை மறைப்பதற்கு பல மில்லியன் ரூபாவை லஞ்சமாக பெற்றுக்கொண்ட விதம் உள்ளிட்ட பல தகவல்களை எதிர்பாருங்கள்.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top