தாய்வான் வங்கியில் 600 மில்லியன் டொலர் கொள்ளை: இலங்கை வங்கிக் கணக்குகளில் பல தொகை வைப்பு

தாய்வானில் பிரபல வங்கியொன்றில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒரு தொகை இலங்கை வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ள இணைய மோசடியொன்று அம்பலமாகியுள்ளது.

தாய்வானில் குறித்த வங்கியில் 600 மில்லியன் டொலர் பணம் இணையத்தின் வழி கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தப் பணம், பல நாடுகளிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு இணையம் மூலம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது தாய்வான் பொலிசார் உட்பட பல நாடுகளின் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட 600 மில்லியன் டொலர் பணத்தில் ஒரு தொகை இலங்கை வங்கிக் கணக்குகள் சிலவற்றிலும் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தக் கணக்குகள், கணக்கு உரிமையாளர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர் பலரின் வங்கியின் கணக்குகளிலேயே இந்தப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் மூலம் தெரிவந்துள்ளது.

சர்வதேச நிதி மோசடி வலையமைப்பின் சில செயல்பாடுகள் இலங்கையிலும் முன்னெடுக்கப்படுவதாக இதன்மூலம் அம்பலமாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top