Namal-Rajapaksa-arrested Video

MPs Namal Rajapaksa, DV Chanaka, Prasanna Ranaweera and 3 others arrested by Hambantota Police over the protest held in Hambantota on Friday, the Police spokesman said.

Video

 

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூன்று மக்கள் பிரதிநிதிகள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக, ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டு எதிரணியினர் அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கான அனுமதியை நீதிமன்றம் இரத்துச் செய்திருந்தது.

இருந்தபோதும், திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்களாகக் கருதி, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, டி.வி.சானக்க, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாமல் ராஜபக்ச, சானக்க, பிரசன்ன உட்பட ஆறு பேர் அம்பாந்தோட்டை பொலிஸில் ஆஜராகினர்.

இந்நிலையில் இவர்க்ள கைது செய்யப்பட்டுள்ளனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top