1150 x 80 px

 

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் ஐ.தே.கவிற்கு

லங்கா நியூஸ் வெப் இதற்கு முன்னர் தகவல் வெளியிட்டதைப் போல முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்வது உறுதியாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் கெஹெலிய ரம்புக்வெல்ல ஐ.தே.கவில் இணைந்துகொள்ளவுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்லவை மீண்டும் இணைத்துக் கொள்வது குறித்து ஐ.தே.கவின் தலைவரின் ஆலோசனைக்கமைய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் மலிக் சமரவிக்ரம பேச்சு நடத்தி வருகிறார்.

கெஹெலிய ரம்புக்வெல்லவை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் சில எதிர்ப்புக்கள் இருந்தாலும் இவை அனைத்தையும் மலிக் சமரவிக்ரம சமரசம் செய்து வருகிறார்.

குறிப்பாக இதற்கு லக்ஸ்மன் கிரியெல்ல எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அந்தக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலிடத்தை லக்ஸ்மன் கிரியெல்லவின் மகள் சாம் கிரியெல்லவிற்கு வழங்குவதாகவும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குவதற்கும் இதற்கு முன்னர் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ள 2015 ஜனவரி 10ஆம் திகதி முதல் தயாராகி வருகிறார். எனினும், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பல காரணங்களுக்காக கெஹெலியவை இணைத்துக் கொள்வதைத் தாமதித்து வந்தார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் இருவரையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைத்துவருவதாக கெஹெலிய ரம்புக்வெல்ல, மலிக் சமரவிக்ரமவிற்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த முயற்சியின் மூலம் டிரொன் பெர்னாண்டோவிற்கு நடந்ததே லக்ஸ்மன் கிரியெல்லவிற்கும் நடக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலிடத்தை வழங்குவதாக டிரோன் பெர்னாண்டோவிற்கு வாய்ப்பளிப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும், அவருக்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top