1150 x 80 px

 

நான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவன் : நாமல்

தான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவன் என்றும், தான் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியைச் சேர்ந்தவன் அல்ல எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்பதை தான் அறியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் நண்பர்கள் சிலரைச் சந்தித்தபோதே நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
''தனது ஆலோசனைகளைப் பெற தான் ஒன்றும் குழந்தை அல்ல என்று தந்தை கூறுகிறார். எனினும், இந்தியாவுடன் சேர்ந்து சித்தப்பா பசில் செய்யும் டீல்களை தந்தை அறியவில்லை. மொட்டுக் கட்சிக்குள் இருக்கும் வெளிநாட்டு ஆதிக்கத்தை நாம் சரியாக அடையாளம் காண வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தவே மொட்டுக் கட்சியை இந்தியா போசித்து வருவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத் திட்டத்தைக் குழப்பவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் தலையை சாத்துக் கொண்டாவது ஜனாதிபதியுடன் சேர்ந்துகொண்டு, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். 2022ஆம் ஆண்டு பசில் சித்தப்பா மொட்டுக் கட்சியுடன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்வார். இதனை எழுதிவைத்துக் கொள்ளுங்கள். எனவே எந்த முயற்சியை செய்தாவது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். என்று நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

அரசியல் முன்னெடுப்புக்கள் எவ்வாறு இருக்கும் என்பதை நாமல் ராஜபக்ச ஊகிக்க ஆரம்பித்துள்ளார் என்பதே நாமலின் இந்த கருத்துக்களின் மூலம் தெளிவாகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top