1150 x 80 px

 

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் ரஷ்யா!

ரஷ்யாவினால் இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த தேயிலை ஏற்றுமதிக்கான தடையுத்தரவு டிசம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாக இலங்கையிலுள்ள ஊடகங்கள் கொண்டாட்ட புகழாரத்துடன் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கின்றன.

எனினும் அவர்களுக்கத் தெரியாத தயார்த்தமானது ரஷ்யா இதனூடாக ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை பறிக்க நினைப்பதால் இதுபோன்ற சம்பவங்களினால் பாரிய இராஜதந்திர நெருக்கடிகளை இலங்கை எதிர்நோக்கும்.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியை ரஷ்யா தடைசெய்தமைக்கு காரணம் அதில் காணப்பட்ட சிறிய ரக வண்டு என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். எனினும் தேயிலை ஏற்றுமதியை தடை செய்தமைக்கான பிரதான காரணம் “nws” அதாவது ஒற்றராக இரகசிய தகவல்களை வழங்கும் மெனோகின் ஃபொ;டோ என்பவரே ஆவார்.

ரஷ்யாவைச் சேர்ந்த மெனோகின் ஃபொ;டோ சர்வதேச நிதிமோசடியாளர் என அடையாளப்படுத்தி அவரை கைது செய்து தருமாறு அமெரிக்கா இலங்கை அரசிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு ரஷ்ய அரசினால் இலங்கை அரசிடம் கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவினதும் ரஷ்யாவினதும் இராஜதந்திர பிரச்சினைக்கு இலங்கை அரசு மத்தியஸ்தம் வகிப்பதை எமது இனையத்தளமான லங்கா நியூஸ் இணையத்தளம் வெளிப்படுத்தியது.

இந்த மெனோகின் என்பவர் அமெரிக்க ஜனாதிபதி தோ;தலின் போது ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலை மேற்கொண்ட முக்கிய நபராக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அவரை இலங்கை அரசின் ஊடாக தமது நாட்டிற்கு கொண்டு செல்வதற்கான தேவையொன்று அமெரிக்காவிற்கு இருந்தது. இவரை கைது செய்வதற்காக சர்வதேச பிடியாணை ஒன்றையும் அமெரிக்கா கொண்டிருந்தது.

அவர்கள் திட்டப்படி கைது செய்யப்பட்ட போதிலும் அவர்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவில்லை.

இந்த சந்தர்ப்பத்திலேயே இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பிரச்சினையும் வெடித்தது. இந்த நிலையில் ரஷ்யாவினால் ஏற்றுமதி செய்யப்படும் அஸ்பெஸ்டர்ஸ் தடை நீக்கப்பட்டிருந்தது. இலங்கைக்கு அஸ்பெஸ்டர்ஸ் ஏற்றுமதி செய்யும் பிரதான நாடு ரஷ்யாவாகும்.

எனினும் அது வாய்ப்பளிக்கவில்லை. இறுதியில் மெனோகின்னை ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு அரசாங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவா; முன்னின்று செயற்பட்டார். இதனை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளும் உறுதிப்படுத்துவார்கள். தேயிலை ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது அவர் மீண்டும் ரஷ்யாவிற்கு காலடி எடுத்து வைத்த பின்பே ஆகும். ரஷ்யா இந்த செயற்பாட்டின் ஊடாக தமது ஒற்றனை மீண்டும் நாட்டிற்கு பாதுகாப்பாக எடுத்துக் கொண்டதோடு அஸ்பெஸ்டர்ஸ் கூரைத் தகடுக்கான தடையையும் நீக்கிக் கொண்டது.

இந்த செயற்பாடுகளினால் அமெரிக்கா இலங்கை மீது கடும் கோபமடைந்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்கவையும் திட்டித் தீர்த்துள்ளாராம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top