1150 x 80 px

 

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி அரசாங்கத்திற்கு

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் எயார் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்தும் குழப்படைந்த ஷிரந்தி ராஜபக்ஷ சமாதானம் செய்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் தொடர்புடையவர்களுக்குத் தகவல்களைத் தொடர்ந்து அனுப்பியுள்ளதாக எமது இணையத்தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஷிரந்தி ராஜபக்ஷவின் சகோதரரான நிஷாந்த விக்ரமசிங்க ஆவார். அவர் தலைவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் பாரிய மோசடிகளும் அத்துமீறல்களும் இடம்பெற்றதாக பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டால் அனைத்து ஊழல்களும் வெளியாகுமென ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையார் அடைச்சமடைந்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி தரப்பிலுள்ளவா;களுடன் தொடர்புகொண்டமை எவ்வாறான ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலாவது அல்லது ராஜபக்ஷ தரப்பை அவருடன் சமாதானம் செய்து வைப்பதற்காகவே அவர் இவ்வாறு தலையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

நிஷாந்த விக்ரமசிங்க ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய காலகட்டத்தில் உத்தியோகப்பற்றற்ற தலைவராக கடமையாற்றியது ஷிரந்தி ராஜபக்ஷ என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல மில்லியன் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது ஷிரந்தி ராஜபக்ஷவின் விருப்பத்தின்படியே ஆகும்.

எமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் பல பலவீனங்கள் இருந்திருக்குமாக இருந்தால் அது நிஷாந்த விக்ரமசிங்க என்ற திருடனுக்கு அல்ல. ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் அனைத்து அத்துமீறல்களுக்கும் பொறுப்பு கூறவேண்டியது நிஷாந்தவின் மகன் டில்ஷான் விக்ரமசிங்கவும் ஷிரந்தி ராஜபக்ஷவுமே.

இதனாலேயே ஷிரந்தி மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிறார். எனினும், ராஜபக்ஷ குடும்பத்தை மல்லுகட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள துருப்புச் சீட்டு மிகவும் வலிமையானது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top