1150 x 80 px

 

கப்பம் கோருவதற்கு கடத்தப்பட்டு பின்னர் அவரைப் புலிகள் எனக்கூற நினைப்பது வேதனையாகும்

மஞ்சரி அம்மாவின் பிறந்தநாளுக்காக நிறம் மாற்றப்பட்டு வழங்கப்பட்ட கார் எவ்வாறு வந்தது என்று அப்பாவிடம் கேளுங்கள்!

கொழும்பு மற்றும் அதனை அண்டியூள்ள 11 இளைஞர்கள் கடத்தப்பட்டும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பீ. தசநாயக்க உட்பட மேலும் ஐந்து பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதியரசர் லங்கா ஜயரத்ன கடந்த 22ஆம் திகதி உத்தரவிட்டார்.

2009ஆம் ஆண்டில் இருந்து இந்த சம்பவம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது கீழே தள்ளப்பட்டு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளமை ஒரு முக்கிய விடயமாகும்.

இந்த கடத்தல்களுடன் மற்றும் காணாமல் போன சம்வங்கள் பலவூம் இடம்பெற்றுள்ளதாக குற்றத்தடுப்புப் விசாரணைப் பிரிவு திணைகளத்திற்கு தகவல்கள் கசிந்துள்ளன. 11 இளைஞர்களது உறவினர்கள், பிள்ளைகள், சகோரர்கள், கணவன் ஆகியோருக்காக நியாயம் வழங்குவதற்கு விசாரணை மேற்கொண்ட வேளையில் இந்த சம்பவங்களின் பின்னணியில் தசநாயக்க உள்ளிட்ட குற்றவாளிகள் சார்பிலும் நியாயம் கூறுகிறார்கள்.

ஒரு பக்கத்தில் மனிதாபிமானம், மனித உரிமைகள் என்று எடுத்துக் கொண்டாலும் மறுபுறத்தில் யுத்த வீரருக்கான என்ற நியாயம். நாளைக்கு இந்த விடயத்திற்கு மேலும் சில கருத்துக்களும் சேர்க்கப்படும். இன்னொரு பக்கத்தில் நியாயத்தை நிலைநாட்டுமாறு மற்றொரு பிரிவு கண்களை அகலமாக விரித்துக் கொண்டு பார்த்துக்கொண்டு கனவு காணுகிறார்கள்.

என்றபோதிலும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் போலவே தசநாயக்கவின் பக்கத்திலுள்ள பிள்ளைகள், மனைவி, தாய் ஆகியோர் மிக பரிதாபகரமாக இருக்கின்ற ஒரு நிலையில் எவருக்கும் தமது அன்பானவர்களின் பிரிவு தாங்க முடியாத ஒரு வேதனையைத் தருகின்றது.

எனினும், இவ்வாறான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வதற்க பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் நிர்வாகிகளுக்கு இடையில் சுற்றியுள்ள மனித உரிமை சாசனங்களுக்கு கையெழுத்துக்கு மேலும் கையெழுத்திட்டாலும் இந்த நாட்டிலுள்ள தாய் தகப்பன்மார், சகோதரர்கள், சகோதரிகள் அநேகம் பேர் இன்று பெருமூச்சு விட்டுக்கொண்டு மிகுந்த எதிர்பார்ப்புடனேயே வாழ்கிறார்கள்.

இந்த 11 இளைஞர்களின் சம்பவம் இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும்.

தஸநாயக்க தற்போது விழுந்துள்ள குழியில் இருந்து எப்படியாவது வெளியேவருவதற்கே முயற்சி செய்கிறார். இதனை மறுதளிப்பதன் ஊடாக தங்களுடைய குழந்தைகள் கூட சர்வதேசத்தின் முன்னால் செல்வதற்கு முயற்சி செய்வது இதற்காகவே ஆகும். இதற்கு உள்ள ஒரே ஒரு துருப்புச் சீட்டு , விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். சா;வதேசத்தில் நல்ல மனிதர்களுக்கு உண்மைக்குப் பதிலாக இம்மாதிரியான விஷயங்களைக் காட்டினால் தப்பிக்க முடியும் என்பது தஸநாயக்க போன்றோருக்கு நன்றாகத் தெரியும்.

என்றாலும் யுத்தத்தை வென்றவர்கள் அல்லவா? இன்று வீதியில் நடந்து செல்வது இவர்களால் தான். குளவிகளுக்கு கல்லொன்றை எறிந்தால் அது நன்றாக இருக்கும். காணாமல் போனவர்கள் புலிகளாகினால் மற்றவர்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள் ஆவதுபோன்று. எனினும் உண்மை அதுவல்ல, இந்த சமூகம் அதனை புரிந்துகொள்வது மிகவும் காலதாமதத்துடனாகும்.

ரஜீவ் நாகநாதன் உள்ளிட்ட 11 போ; கடத்தப்பட்டது கப்பம் போருவதற்காகவே. அது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உறுதிப்படுத்தலோடு அதுவரை அவர்களுக்கு எதிராக புலிகள் என்ற முத்திரை தற்போது நீக்கியுள்ளது. இந்த இடத்தில் தங்களது உறுப்பினர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வேண்டி நின்றவர்களில் கப்பம் கொடுத்தவர்களும் இருந்தார்கள். எனினும் தங்களுடைய பிள்ளை, சகோதரர், கணவர் வீட்டுக்கு வரவில்லை.

இதுவரை அவர்கள் காணாமல் போயுள்ளனர். ரஜீவ் கடத்தப்பட்டது அவருடைய மோட்டார் காருடன். அடுத்த நாள் மருத்துவ கல்வியை மேற்கொள்வதற்கு வெளிநாடு செல்லவிருந்த ரஜீவ் தான் அவரது நண்பர்களுடன் கடத்தப்பட்டார். ரஜீவ் மீண்டும் வீட்டுக்கு வரவும் இல்லை. அவருடைய காருக்கும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

இதில் இருக்கும் முக்கியமான விடயம் தான், அந்த காருக்கு என்ன நடத்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின்படி ரஜீவின் கார், திருகோணமலை கடற்படைத் தளத்தின் வேலைகளுக்காக அங்கும் இங்கும் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அந்த மோட்டார் சைக்கிள் தசநாயக்கவிற்கு தமது வாழ்க்கையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஒன்றாக இருந்தது. தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் ரஜீவின் காரின் (Nளைளயn ஆயசஉh-டீடயஉம) நிறம் மாற்றப்பட்டுள்ளது. கருப்பு நிறம் தற்போது சிவப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

காருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. யுத்த வெற்றியை முன்னால் காட்டிக்கொண்டு பல மாற்றங்கள் இடம்பெற்றது இவ்வாறாகும். மஞ்சரியாக இருந்தாலும் யுத்தத்தை பற்றிக் கூறிக்கொண்டே இருப்பது போன்றே அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று தேடிப் பார்ப்பது சாலச் சிறந்ததாகும். எவரும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் ஒரு குற்றவாளியென லேபல் ஒட்டப்படுவதை விரும்ப மாட்டார் என்பது உண்மை தான்.

கப்பம் கோருவதற்கு கடத்தப்பட்டு பின்னர் அவரை புலிகள் எனக்கூற நினைக்கும் போது அது மிகவும் வேதனைத் தருவதாக இருப்பதை எவரும் இங்கு புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top