1150 x 80 px

 

கல்வி என்ற பெயரில் பெற்றோரை சுரண்டும் குழுக்கள்

தமது பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் தற்போது பாரிய தியாகங்களைச் செய்துவருகின்றனர். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக சிறந்த பாடசாலைகள், தனியார் வகுப்புக்கள், மேலதிக கருத்தரங்குகள், பிரத்தியேக வகுப்புக்கள் என தமது சக்திக்கு முடிந்த அனைத்துப் பிரயத்தனங்களையும் பெற்றோர் முன்னெடுகு;கின்றனர். இதனைப் பயன்படுத்தி, பெற்றோரை சுரண்டிப் பிழைக்கும் நபர்களும், குழுக்களும் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாறு கல்வி என்ற பெயரில் நடக்கும் சுரண்டல் ஒன்று குறித்து இரத்தினபுரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அந்தப் பதிவின் விபரம் வருமாறு,

பாடாலையில் 2,3,4ஆம் தரத்தில் கல்வி பயிலும் பிள்ளைகளின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதாகக் கூறி, ஈபொக் பரீட்சை (EPOCH Examination) என்று ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாடசாலைகள், தனியார் வகுப்புக்கள் ஆகியவற்றை இலக்குவைத்தே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சையொன்று நடத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்படுகிறது. பாடசாலைகளில் உள்ள வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக துண்டு பிரசுரம் இந்த அறிவிப்பு அனுப்பப்படுகிறது. ஜனாதிபதியின் விசேட செயல்திட்டப் பணிப்பாளர் சரத் சன்தநாயக்கவின் கையெழுத்தும் இந்த அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ''சத்சஹன நிதியம்'' என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்தின் இலட்சியை பயன்படுத்தப்பட்டு (இலங்கை அரசாங்க இலட்சினையை தனியார் பயன்படுத்த முடியாது. இது தனியாக பேசப்படவேண்டிய தலைப்பபு).

Edu3

இந்த அறிவித்தலுக்கு அமைய குறித்த பரீட்சைக்கு பிள்ளைகள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவித்தலில் விக்ரமசிங்கபுர, பத்தரமுல்ல என்ற முகவரியும், இது பாடசாலை ஆசிரியர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது என்பதாலும் பெற்றோர் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கின்றனர். இந்த பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதாகக் கூறி, குறித்த குழுவினர் மேலதிக வகுப்புக்களை நடத்துகின்றனர்.

Edu5

பரீட்சைக்கு விண்ணப்பித்த பின்னர் பரீட்;சைக் கட்டணமாக 650 ரூபா கோரப்படுகிறது.

Edu6

இந்தப் பணம் இலங்கை வங்கி 81878479 என்ற கணக்கில் வைப்பிலிடுமாறு கோருகின்றனர். இந்தப் பரீட்சைக்காக சுமார் 500 பிள்ளைகள் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான வகுப்புக்களுக்காக 500இற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த வங்கிக் கணக்கில் எவ்விதத் தடையும் இன்றி பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. எனினும், அண்மைக்காலமாக இந்த வங்கியில் பணம் வைப்புச் செய்ய செல்லும ;பெற்றோரிடம், குறித்த வங்கிக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்களினால் கூறப்பட்டுள்ளது.

Edu7

இதனால் குழப்பமடைந்த பெற்றோர் குறித்த நிறுவனத்தின் தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போது குறித்த வங்கியில் பணம் வைப்புச் செய்ய வேண்டாம் என அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த குழுவினர் பெற்றோருக்கு அறிவழித்துள்ளனர். எனினும், பரீட்சை நிலையத்தில் குறித்த பணத்தை செலுத்த முடியும் எனக் கூறியுள்ளனர்.

பரீட்சை நிலையங்களாக அரசாங்கப் பாடசாலைகளின் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

Edu8

தல்துவ போதி வித்தியாலயம், அவிசாவளை ஜனாதிபதி வித்தியாலயம், கெடஹெத்த அநுர வித்தியாலயம், ஹிங்ஹசன்சேன வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Edu9

கடந்த 31ஆம் திகதி இந்தப் பரீட்சை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெற்றூர் தமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு குறித்த பரீட்சை நிலையங்களுக்குச் சென்றுள்ளனர். எனிழனும் அங்கு அவ்வாறு பரீட்சையொன்று நடத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சை தனியார் நிறுவமான சிபெல்கா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நடந் சந்தேகத்திற்குரிய சம்பவங்களினால் குழப்பமடைந்த பெற்றோர், பரீட்சை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அங்கிருந்த ஏற்பாட்டாளர்களிடம் பெற்றோர் கேள்வியெழுப்பியுள்ளனர். இதன்போது பரீட்சைக் கட்டணத்தை மீள செலுத்த ஏற்பாட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வாய்த்தர்க்கமாக மாறியதுடன், கைகலப்புவரை நீடித்துள்ளது. இதனால் 119 இலக்கத்திற்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு விரைந்த பொலிசார் பெற்றோரைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்பின்னர் பொலிசாரின் தலையீட்டுடன் பரீட்சைக் கட்டணம் மீளளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிக் கும்பல்கள் கல்வி என்ற பெயரில் பல தகடுதத்தங்களைச் செய்துவருவதாக பெற்றோர் விழிப்புடன் இருப்பது நல்லதென பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top