1150 x 80 px

 

ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ரவி

பிணை முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஜனாதிபதி இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

பிணை முறி மோசடி குறித்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதனால் ரவி கருநாணாயக்க தனது அமைச்சுப் பதவியை இழந்தார். எனினும், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கமைய ரவி கருணாநாயக்க குற்றமற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் குற்றவாளிகள் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

எனினும், கடந்த காலங்களில் வெளியான தகவல்களுக்கமைய, பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களிடமிருந்து லஞ்சமாக வீடொன்றைப் பெற்றுள்ளதாக ரவி கருநாணாயக்க மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து லஞ்ச, ஊழல் மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் திரடப்பட்டுள்ளதாகவும ;கூறப்படுகிறது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ரவி கருநாணாயக்க தொடர்ந்து மறுத்து வருகிறார். குறித்த வீட்டைக் கொள்வனவு செய்வதற்காக செலான் வங்கியில் இருந்து ரவி கருநாணாயக்க வீட்டுக் கடன் ஒன்றைப் பெற்றுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவரது சட்டத்தரணிகள் அறிந்திருந்த போதிலும் இதுகுறித்த தகவல்களை பிணை முறி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தகவல் சமர்ப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரிக்கவுள்ளதாகவும், முன்னாள் நிதியமைச்சர் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top