1150 x 80 px

 

மஹிந்தவின் சிவில் உரிமை ரத்துச் செய்யப்படும் அவதானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமை ரத்து செய்யப்படும் அவதானம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய அளவிலான ஊழல், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின்போது இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுக்கும் ஊழல்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி தொடர்புபட்டுள்ளதாக குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியின் சிவில் உரிமையை ரத்து செய்யவேண்டுமெனவும் அந்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுவினர்கள் மற்றும் நண்பர்கள் பாரிய அளவில் அரச சொத்துக்களை தங்களுக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்தியுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் பல்வேறு செயற்திட்டங்களின்போது லஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசாரணை செய்வதற்காக குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லை கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்துள்ளதுடன் கடந்த 02ஆம் திகதி ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையை மற்றும் 17 விடயங்கள் தொடர்பிலான அறிக்கை ஜானதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு முன்னரும் சில விடயங்கள் தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இரகசியமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top