1150 x 80 px

 

தொடர்ந்தும் சரிவை நோக்கிச் செல்லும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்

ஶ்ரீலங்கன் பணிப்பாளர் சபை விலகல் - நோயாளிக்கு மருத்துவமனைக் கொடுத்துவிட்டு மருத்துவர்கள் வீடு சென்ற சென்ற கதை

இலங்கையின் தேசிய விமான சேவையான ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தற்போது நாட்டிற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்த நிறுவனம் 2016/17 நிதி ஆண்டில் மட்டும் 27,789 மில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது.

இந்த நிறுவனத்தைத் தனியார் மயப்படுத்த அரசாங்கம் அண்மைக்காலமாக ஆலோசித்து வந்தது. இதற்கு சரியான முதலீட்டாளர்களைத் தேடிக் கொள்வதில்கூட அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. குறித்த நிறுவனம் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.

பிரதமரின் பலத்துடன் சுரேனின் பதவி ஸ்திரமானது

நட்டமடைந்து வந்த ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மீட்பதற்காக பிரதமரினால் சுரேன் ரத்வத்த பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார். எனினும், அந்தப் பதவிக்கு அவர் எந்தவொரு தகுதியும் அற்றவர். விமானப் பணியாளராக பணியாற்றியிருப்பதே அவர் பெற்ற ஒரே தகுதியாகும். இதற்கு மேலதிகமாக அவர், பிரதமரின் ஆலோசகர்களில் ஒருவரான ரத்வத்தவின் சகோதரர் என்பது மற்றுமொரு தகுதியாகும்.

அத்துடன், பிரதமர் அலுவலகத்தின் அழுத்தங்களுடன் அவரின் பதவிக் காலத்தை நீடித்துக்கொள்ளுமளவுக்கு சுரேன் ரத்வத்த செல்வாக்குப் பெற்றிருந்தார். எனினும், இந்தப் பதவியை அவருக்கு வழங்க பணிப்பாளர் உறுப்பினர் சபை எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஆதரவு கொடுக்கவில்லை. எனினும், சுரேனை CEO பதவியில் எந்தவகையிலாவது நியமிக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. அவ்வாறு இல8;லையெனில் பணிபாளர் சபையை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் எனவும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.

அஜித் டயஸ் வீட்டிற்கு

தற்போது கிடைக்கும் தகவல்களுக்கமைய, ஶ்ரீலங்கன் நிறுவனத்தின் தலைவர் அஜித் டயஸ், பதவி விலக தயாராகி வருவதாக தெரியவருகிறது. அவர் இந்த வாரத்தில் தனது ராஜினாமாக் கடிதத்தை அனுப்பிவைக்க தயாராகியுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் சிலரும் பதவி விலகியிருந்தனர். எனினும், அவர்கள் இந்தப் பதவிகளில் இருந்து தன்னிச்சையாக விலகிவில்லை எனவும், அவர்களை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த, நிறுவனம் தற்போது எதிர்கொண்டுள்ள நட்டத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவராவார். இவர் குறித்த பதவியை வகிப்பதற்கு எந்தவொரு தகுதியோ, அனுபவமோ அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிப்பாளர் சபை உறுப்பினர்களும், ஊழியர்களும் சுரேன் மீது அதிருப்தியில் உள்ளனர். விமான சேவை நிறுவனத்தின் 7 தொழிற்சங்களும் அதிருப்தியில் உள்ளன. குறித்த நிறுவனம் எதிர்கொள்ளும் நட்டத்தை குறைக்க வேண்டுமாயின் சுரேன் பதவி விலக்கப்பட வேண்டுமென அநேகர் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும், பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டினால் இதன் மறுபக்கமே தற்போது நடந்துள்ளது. எந்தவொரு தகுதியும், அனுபவம் இல்லாத ஒருவரை CEO பதவிக்கு சுரேனை அமர்த்தி, அவருக்குத் தேவையானவர்களை பணிப்பாளர் சபைக்குள் உள்வாங்க பிரதமர் அலுவலகத்தின் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தற்போதுள்ள பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

CEO புற்றுநோய்

சுரேன் ரத்வத்தவை CEO ஆக நியமிக்கும்போது, நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. எனினும், இந்த எதிர்ப்புக்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை. சுரேன் ரத்வத்த தற்போது ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு ஒரு புற்றுநோயாக மாறியுள்ளதாக ஊழியர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, புற்றுநோய்க்கு சிறிய அளவில் சிகிச்சைகளைச் செய்யாது. அதனை வெட்டி அகற்ற வேண்டும் என ஊழியர்கள் கோரியுள்ளனர்.

எயார் ஏஷியா - ஓல் நிபோன்

ஶ்ரீலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது எயார் ஏஷியா மற்றும் ஓல் நிபோன் எயார்பஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது விருப்பம் வெளியிட்டுள்ளன. இதில் எயார் ஏஷியா முன்னணியில் உள்ளது. எயார் ஏஷியா நிறுவனம் மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பர் உள்ளிட்ட நாடுகளில் தனது பிரதான விமான சேவைகளை நடத்தி வரும் நிறுவனமாகும். ஓல் நிபோன் நிறுவனம் ஜப்பானின் முதல்தர விமான சேவை நிறுவமானும்.

எயார் ஏஷியா நிறுவனத்திற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகத்தை ஒப்படைக்க ஊழியர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த நிறுவனத்திற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வழங்கப்படுமாயின் இந்த இன்னும் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் மகிந்த ஹரிதாசவின் மருமகன் ஊடாகவே எயார் ஏஷியா நிறுவனம் இந்த வர்த்தகத்திற்கு உள்ளீர்க்கப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top