1150 x 80 px

 

ரஷ்ய உளவாளியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

மெனோகிங் ஃபேர்டோ (Manokin Fardov) என்ற ரஷ்ய உளவாளி குறித்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றின் அறை 06இல் கடந்த 26ஆம் திகதி விசாரிக்கப்பட்டது.

பிணை நிபந்தனையை மீறியமைக்காக குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது. அன்றைய தினத்தில் குறித்த சந்தேக நபரில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாவிடின் குறித்த சரீரப் பிணைத் தொகையை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபருக்காக மாத்தறை வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சரீர பிணை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சரீர பிணைத் தொகையை செலுத்துமாறு ரஷ்ய தூதரத்திடம் குறித்த சந்தேக நபர் கோரியுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top