1150 x 80 px

 

ஜனாதிபதி செயலாளரினால் சட்டமா திணைக்களத்திற்கும் CIDஇற்கும் அழுத்தம்

சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய ஒருவரையேனும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் கைதுசெய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாக லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் இந்த அழுத்தங்களைக் கொடுப்பதாக தெரியவருகிறது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் பரபரப்பாக்குவதற்கு இவர்கள் இந்த அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும், எனினும், சட்ட ஒழுங்குகளைப் பூர்த்தி செய்யாது எவரையும் கைதுசெய்ய முடியாது எனவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சட்ட நடவடிக்கைகளை எடுக்க குறிப்பிடத்தக்க காலம் செல்லும் எனவும், அதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்து மனித உரிமை வழக்குகளில் சிக்கிக் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலாளரின் தற்போதைய செயற்பாடுகள், ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட அதிக அழுத்தங்கள் தரக்கூடியதாக இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் குறித்த அதிகாரி தெரிவித்தார்.

பிணைமுறி மோசடியாளர் மீதான குற்றப் பத்திரிகையை, சுயாதீன சட்டத்தரணிகள் குழுவொன்றிடம் கொடுத்த பரிசீலித்து பார்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதன்கூடாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கை இல்லாததை எட்டுக்காட்டுவதாக அமைகிறது என குறித்த அதிகாரி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த அறிக்கை ஒருவகையில் நகைப்பிற்குரியதாகும். எவ்வாறாயினும், இந்த கருத்துக்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறுகையில், தொழில் ரீதியாக தம்மை கொச்சைப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top