1150 x 80 px

 

லண்டன் தமிழர்களை கழுத்தறுப்பதாக சைகை காட்டிய இராணுவ அதிகாரி வெளியேற்றப்படும் அறிகுறி

சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் கழுத்தை அறுப்பது போன்ற சைகைகளை காட்டிய பாதுகாப்பு குழு அங்கத்தவர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றுமாறும், அவரது இராஜதந்திர உரிமை மற்றும் அதிகாரங்களை உடனடியாக நீக்குமாறு ஐக்கிய இராஜ்ஜிய வெளிவிவகார செயலாளருக்கு அந்நாட்டு நாடாளுமன்ற குழுவொன்றின் மூலம் வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தொழில்கட்சியின் மக்கள் பிரதிநிதி மற்றும் உலகலாவிய தமிழ் பேரவையின் முன்னாள் ஆலோசகரான ஜொஹான் ரயன் மற்றும் மக்கள் பிரதிநிதி சியோஹாயன் மெக்டொனால்ட் ஆகியோரினால் வெளிவிவகார செயலாளரான பொரிஸ் ஜொன்சனுக்கு எழுத்து மூலம் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் பிரதிநிதிகள் இருவரும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் குறித்து சர்வ கட்சிகுழுவின் உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 2017ஆம் ஆண்டு முதல் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பாதுகாப்பு குழுவினராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், உத்தியோகபூர்வ சீருடையில் இருந்துகொண்டு இவ்வாறான அச்சுறுத்தல் விடுத்த வீடியோ ஒளிப்பதி உலகம் முழுவதும் கையடக்க தொலைபேசிகளில் வலம் வருகின்றது. அந்த வீடியோவில் இருக்கின்ற விதமாக அவர் மூன்று தடவைகள் கழுத்தை அறுப்பது போன்ற சைகைகள் காண்பிக்கப்பட்ட இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கதோடு அறுவருக்கத்தக்க விடமாகவே கருதப்படுவதாகவும் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய இராஜ்ஜியம் போன்ற நாட்டுக்கு, இலங்கை பாதுகாப்பு படையினரின் சீருடையை போட்டுக் கொண்டு அவரால் இவ்வாறானதொரு செயலை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உலகலாவிய தமிழ் பேரவையின் தலைவர் சென் கந்தையா கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவம், தமிழ்கள் தொடர்பாக மனிதாபிமானமற்ற முறையில் அநீதிகள், யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் செயல்பாடுகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வேளையில் இந்த இராணுவ அதிகாரியின் நடத்தை ஐக்கிய இராஜ்ஜியத்தின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் பாரிய அச்சுறுத்தல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி மக்கள் தொடர்பு பிரதிநிதிகள் இருவரின் கண்டனத்திற்கு தாமும் ஒத்துழைப்பு வழங்கும் முகமாக உடனடியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை தாமும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top