1150 x 80 px

 

சுதந்திர தினமும் லண்டன் நகரில் இராணுவ அதிகாரியின் சண்டித்தனமும்

தற்போது கையடக்கத் தொலைபேசியில் உலகம் முழுவதிலுமுள்ள இலங்கையர் மத்தியில் வேகமாக காணொளியொன்று பரவி வருகிறது. பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு லண்டன் நகரில் இராணுவ அதிகாரியொருவரின் சண்டித்தனமே குறித்த வீடியோவில் காணப்படுகிறது.

இலங்கை இராணுவத்தின் நற்பெயரை சர்வதேசத்தின் மத்தியில் மீண்டும் கட்டியெழுப்பி வரும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த முயற்சிக்கு கத்தி வீசும் வகையிலும், இலங்கை என்ற பெயரில் கரி பூசும் வகையிலும் இந்த இராணுவ அதிகாரியின் செயற்பாடு அமைந்துள்ளது.

கழுத்து அறுக்கப்படும் என்ற வகையில் சைகை செய்யும் இந்த இராணுவ அதிகாரி, ஒரீரு முறையல்ல மூன்று முறை இவ்வாறு காண்பித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அராசங்கம் (Transitional Government of Tamil Ealam) என்ற புலம்பெயர் தமிழர்களின் புலி ஆதரவாளர்களின் அமைப்பினால் பெப்ரவரி 04ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றே குறித்த இராணுவ அதிகாரி இவ்வாறு சைகை செய்துள்ளார்.

இந்த இராணுவ அதிகாரி இவ்வாறு நடந்துகொண்டதன் பின்னர் சில விநாடிகளுக்குள் அங்கிருந்து வெளியேறினார்.

குறித்த இராணுவ அதிகாரியின் செயற்பாட்டை சிங்கள மக்களும், சில சிங்கள ஊடகங்களும் வன்மையாக கண்டித்து வருகின்றன.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், இராணுவ அதிகாரி ஒருவரின் இவ்வாறான செயற்பாடு இலங்கை அரசாங்கத்தின் முழு முயற்சியின் மீதும் நம்பிக்கை இழக்க வைக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழ்கள், அங்கு நடத்தும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களும், உரிமைப் போராட்டங்களும் சிங்களவர் மத்தியில், சில சிங்கள அரசியல்வாதிகளினால் இனவாத ரீதியாக பரப்பப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் இரு இனங்களுக்கிடையில் வளர்ந்துவரும் புரிந்துணர்வையும், நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளன.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top